கோபமும் வார்த்தை பிழையும்

572 96 47
                                    

நீயும் நானும் -14

கதிரிடம் நேருக்கு நேர் பேசிவிட வேண்டும் என எண்ணிய முல்லை மறுநாள் கதிரை காண அவன் இல்லம் சென்றாள்.

அங்கு லெட்சுமி அம்மா மட்டுமே இருந்தார்.

முல்லை: அம்மா

லெட்சுமி: வாமா.... எப்படி இருக்க....

முல்லை: நல்லா இருக்கம்மா..

லெட்சுமி: இரண்டு நாள்ல நிச்சயத்த வைச்சுக்கிட்டு ஏன் அழையுறமா..

முல்லை: ஆதவன பாக்கனும் போல இருந்தது அதான் மா.

லெட்சுமி: சரிமா.... ஆதவன் room ல விளையாடுறாமா...

முல்லை: சரிமா... மத்த யாரையும் காணும்..

லெட்சுமி: அப்பா office போய் இருக்காங்க..
கண்ணன் college போய் இருக்கான்...
கதிர் ஒரு வேலை விஷயமா பெங்களூர் போய் இருக்கான் நாளைக்கு night தான் வருவான்.

முல்லை: வாடிய முகத்துடன் சரிமா... நா ஆதவனா பாத்துடு வரேன்..

ஆதவனுடன் சில மணி நேரங்கள் செலவழித்த பின் முல்லை தன் வீடு திரும்பினாள்.


மறுநாள் இரவு வீடு திரும்பி கதிர்....

தன் அறையில் உறங்கி கொண்டு இருக்க...

முல்லை: கதிர் என் கூட எப்பவும் இருப்பல்ல

கதிர்: இது என்ன கேள்வி முல்ல

முல்லை: கேட்டதுக்கு பதில் சொல்லுடா..

கதிர்: சாகுற வரைக்கும் உன் கூட தான் இருப்பேன்.

உனக்கு முன்னாடி நா செத்தா கூட உன்ன கூட கூட்டிடு போய்டுவேன்.

எனக்கு முன்னடி நீ செத்தாலும் உன் கூடவே நானும் வந்துடுவேன்.

உன்ன விட்டுடு என்னால வாழ முடியாதுடி.

முல்லை: நாமா ஏன்டா சாகனும்...

கல்யாணம் பண்ணி பத்து புள்ள பெத்துக்கிட்டு 40 பேரப்பிள்ளை பெத்துக்கிட்டு சந்தோஷமா வாழலாம் சரியா.

கதிர்: பத்து போதுமாடி😜

முல்லை: ஏன் சார்க்கு... பத்து பெக்க திறமை இல்லையா...

நீயும் நானும்Where stories live. Discover now