தப்பும் மன்னிப்பும்

392 86 65
                                    

நீயும் நானும் - 20

கதிரும் முல்லையும் டெல்லி வந்து சேர்ந்தனர்....

இவர்களுக்காக பாண்டியனால் புக் செய்யப்பட்ட ஹோட்டல் அறையில் இருவரும் தங்கினர்...

இரவு 10 மணி அளவில்...

அறையின் பால்கனியில் நின்று வெளிப்புறத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் முல்லை...

கட்டிலில் அமைதியாக அமர்ந்திருந்தான் கதிர்...

இருவருக்கான இரவு உணவினை ஏற்கனவே ஆர்டர் செய்து வர வைத்திருந்தான் கதிர்..

எட்டு மணி அளவில் அறைக்குள் வந்தனர் இருவரும்....

அப்போது பால்கனிக்கு சென்ற முல்லை இரண்டு மணி நேரம் ஆகியும் உள்ளே வரவில்லை...

இனியும் தாமதிப்பது தன் தவறு என உணர்ந்த கதிர் முல்லையிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று அவளை நெருங்கினான்...

கதிர் : முல்ல

முல்லை :

கதிர் : முல்ல.. என்ன திரும்பி பாரு

முல்லை : தேவை இல்லாம என் கிட்ட பேசி உன்னோட நேரத்தை வீணாக்கிகாத கதிர்... போ போய் உனக்கு வேற ஏதாவது வேலை இருந்தா பாரு...

கதிர் : ஏன் இப்படி எல்லாம் பேசுற

முல்லை : வேற எப்படி பேச சொல்ற

கதிர் : முல்ல..

முல்லை : தேவை இல்லாம உனக்கு தொந்தரவு கொடுக்க நான் இங்கு வந்துட்டேனா..

கதிர் : மு...

முல்லை : என்ன கூட்டிட்டு போனு மாமா சொல்லும் போது.. நீ எவ்வளவு தடுமாறினானு எனக்கு புரிஞ்சுது..

என்ன பண்ணித் தொலைக்க...
உன்கூட வரணும்னு மனசு தவிக்குதே...

கதிர் : முல்...

முல்லை : வேண்டா வெறுப்பா தான் நீ என்ன கல்யாணம் பண்ணி இருக்க... வேண்டாவெறுப்பாகவே காலம்பூரா உன்கூட இருக்கணும்...

கதிர் : தயவு செஞ்சு நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளு முல்ல...

முல்லை : மாமா வர சொன்னாங்க நான் வந்துட்டேன்... உனக்கு நான் எந்த தொந்தரவும் தர மாட்டேன்... இங்க இருந்து போற வரைக்கும் நீ சந்தோஷமா இரு.. உன்னோட சந்தோஷத்துக்கு என்னால எந்த ஒரு பாதிப்பும் வராது..

நீயும் நானும்Where stories live. Discover now