அந்த இனிய அதிகாலை பொழுதில் தாமரை தலைவி முன்தினம் மேற்கு நோக்கி பயணமான கதிரவனை காணமால் ஒவ்வொரு நிமிடமும் கிழக்கு நோக்கி காத்து கிடக்க....
சந்திரனோ.. தன் அண்ணன் கதிரவனின் மனைவியான தாமரையின் நிலை கண்டு வருந்தி "தான் சென்று அண்ணனை அழைத்து வருகிறேன்..""என கூறி தேட முற்பட...
தாமரை தலைவியின் வேதனையை சகிக்க முடியாமல் இருள் தேவதை கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஒளித்து கொண்டாள்.
தண்ணீரில் கண்ணீர் மல்க ஒற்றை காலில் நின்று தலைவனை எதிர்பார்த்து கொண்டிருந்தாள் தலைவி ...
தலைவியின் வேண்டுதல் தலைவனின் மனம் அறிந்ததோ...என்னவோ...
""தான் உடனே வந்து விடுவேன்..""என்று சேவலுக்கும் காகத்திற்கும் தூது... அனுப்ப....
அவர்களோ...தலைவி தாமரையின் மனம் குளிர செய்ய...
சேவல் ""கொக்கரக்கோ.......""என்றும்
காகம்""கா.....கா....கா.....'"என கரைய...இவர்களின் தூதில் தாமரை ஆனந்தமடைய.....
கொஞ்சம் நேரத்தில்...தம்பி சந்திரன் மறைந்து கதிரவன்.... தன் கதிர்களை கொண்டு தன் தலைவியின் முகத்தில் அடித்து. ...
தான் வந்து விட்டதை உணர்த்த....
தாமரையோ... சந்தோஷத்தில் தன் இதழ்களை விரித்து தலைவனை...வரவேற்றது...
தாமரை தலைவியின் மகிழ்ச்சி அனைத்து தாவரங்களுக்கும் மரங்களுக்கும் ஒட்டி கொண்டதோ என்னவோ ... அனைவரும் கதிரவனை. ..தலையசைத்தும்...
இலையசைத்தும்.... வரவேற்று கொண்டார்கள்...கதிரவன் தன் தலைவியை கண்ட ஆனந்த வெள்ளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மேலேழும்ப தொடங்கினான்....
மேலே எழும்பிய கதிர்கள் அனைத்து ஜீவராசிகளையும் தொட....
அதில் ஒரு கதிர் ஒரு வீட்டின் ஜன்னல் வழியாக நம் கதாநாயகனின் முகத்தில் பரவ விட்டான்...
நம் கதாநாயகனை பற்றி.....
நம் கதாநாயகனின் பெயர் ஆதித் கிருஷ்ணா...
YOU ARE READING
💘💘💘என்னவனே....நீ எங்கு இருக்கிறாயாடா...!!!💘💘💘💕💓💕
Romance❤️❤️❤️இது என்னோட இரண்டாவது கதை...❤️ ❤️ முதல் கதைக்கு தந்த ஆதரவை போல இந்த கதைக்கும் நீங்க தரணும்னு ஆசைபடுறேன்.... ❤️ 💘💘💘அப்புறம்.. இந்த கதை கறுப்பாக இருக்கும் முரட்டு நாயகனுக்கும்.... ஜாலியாக இருக்கும் நாயகிக்கும் இடையேயான காதல்.....கதை.....💘💘�...