பார்கவியை நினைத்து தன் அறைக்கு வந்த ஆதி முதலில் நன்றாக திட்டவும்... பின் அவளை நினைக்கும் போது பாவமாக தோன்றியது.
"கொஞ்சம் அதிகமாக திட்டிவிட்டோமோ..."என்று தோன்ற.."இல்லை .."என அவன் மனது அடித்து கூறியது.
இவ்வாறு ஆதி அந்த இரவை கழிக்க...
அதே நேரத்தில் வேறு ஒரு அறையில் அச்சு... காதல் வயப்பட்டு ஒரு தடவை கண்ட அந்த புதியவனை... தன் இதயத்தை திருடி சென்ற... அவன் செல்லமான ராட்சசனை கொஞ்சி கொண்டிருந்தாள்.
இவர்கள் இருவரும் வேறு வேறு எண்ணத்தில் மூழ்கி இருந்தனர்.
இதற்கெல்லாம் இடையில் ...
நனைந்தப்படி வீட்டிற்கு வந்த மகளை புரியாமல் பார்க்க....
அவளோ அமைதியாக தன் அறைக்கு போக...
கொஞ்சம் நேரத்தில் ஒருத்தன் வந்து.. தன் கோபத்தை அவள் மேல் காட்ட..
வெளியே வந்தவளோ...'தான் இது எதிர்பார்த்தது தான்"என்பது போல்...பேசமால் நிற்க..
அங்கே நடந்த சம்பவத்தை அச்சு பிசாகாமல் அப்படியே வந்து..
(ஒரு விஷயத்தை மட்டும் தவிர்த்து) ஒப்பிக்க...
அனைத்தையும் கேட்டு கொண்டு நின்றிருந்த கவியின் அம்மா
"அண்ணன் சொல்றது உண்மையா.."என கேட்கஅதுவரை தலைகுனிந்து நின்றவள் மெதுவாக நிமிர்ந்து பார்த்து "ம்ம்ம்.."என்றாள் ஒற்றை வார்த்தையில்..
பார்த்து கொண்டிருந்த ஏதோ ஒரு நல்லவன் இப்படி .. தன் தங்கை மழையில் நடு ரோட்டில் ஆட்டம் போட்டதுமட்டுமல்லாமல் ... அவளின் நிலை கண்டு வெகுண்ட நேரத்தில் தான் அந்த இடத்தில் வாயை மூடி நிற்க வேண்டிய சூழ்நிலை வந்து விட்டதை நினைத்து... கொஞ்சம் கூட கோபம் வந்தது பார்கவியின் அண்ணன் நிஷாந்த்க்கு...
ஆனால் பார்விக்கோ...
"தன் மேல் தவறு ஒரு புறம்...அதை சுட்டி காட்டிய இடத்தில் தன்அண்ணன் நின்றது மறுபுறம்.... இதுவரை தன்னை ஒரு வார்த்தை கொண்டு கூட நோகடிக்காமல் பார்த்து பார்த்து பாசங்காட்டியவன் இன்று..
எரிமலையாய் வெடித்து சிதறியது ஒரு புறம்.. என ... எல்லாம் கலந்த கலவை மனதை அறுக்க...
ESTÁS LEYENDO
💘💘💘என்னவனே....நீ எங்கு இருக்கிறாயாடா...!!!💘💘💘💕💓💕
Romance❤️❤️❤️இது என்னோட இரண்டாவது கதை...❤️ ❤️ முதல் கதைக்கு தந்த ஆதரவை போல இந்த கதைக்கும் நீங்க தரணும்னு ஆசைபடுறேன்.... ❤️ 💘💘💘அப்புறம்.. இந்த கதை கறுப்பாக இருக்கும் முரட்டு நாயகனுக்கும்.... ஜாலியாக இருக்கும் நாயகிக்கும் இடையேயான காதல்.....கதை.....💘💘�...