என்னவன் பகுதி-19

268 4 0
                                    

ஆதியின் வீட்டிலிருந்து வந்த கவி ... தன் மனம் கவர்ந்த கள்வனின் .... ஒவ்வொரு வார்த்தையும் மனதில் ஆயிரமாயிரம் தடவை அசைபோட்டப்படி ..... அன்றைய இரவை கழித்தாள்....

அதேபோல்... நம்ம சிடுமூஞ்சி... ஆதியும்.... கொஞ்சம் சிரிச்ச மூஞ்சி ஆதியாக மாற தொடங்கியிருந்தான்...

அதற்கு காரணம்....

வேறொன்றுமில்லை....

காதல்...... காதல்...காதல்....

காதல் என்ற வேதம் தான் அவனை.... அவன் மனதை.... கொஞ்சம் கொஞ்சமாக.... கரைத்து....இளக வைத்தது....

தான் வாழ்க்கையில் ஒரு தடவை அடி பட்டிருந்தாலும்.... கவியை பார்க்கும் போது....அது எல்லாம் மறந்து அவளது... கண் அசைவுக்காக.....கடை கண் பார்வைக்காக ஏங்க தொடங்கினான்..

அவளது "க்ருஷ்"என்று உரிமையோடு அழைக்கும் அழைப்பில்.... மயங்கி... அவளிடம் செல்லமான கோபித்துக் கொண்டு .... அவள் பதறி நிற்பதை ரசித்து...அவள் தான் இனி எல்லாம் என்ற நிலமைக்கு ஆளானான்....

இந்த நிலையை இனி தொடரமுடியாது "என முடிவு எடுத்தவன்.... நாளை கண்டிப்பாக ... கவியிடம் தன் காதலை சொல்ல முடிவு எடுத்தான்...

இப்படி... ஆதி... தன் காதலை சொல்ல நினைப்பதும்...கவி தனக்கான உரிமை தனக்கு கிடைத்து விட்டது என்றும்...

ஒரு ஜோடி காதல் பறவைகள் தங்கள் காதல் வானில் சிறகடித்து பறந்து கொண்டிருக்க...

இங்கே வேறோரு உள்ளமோ... காதல் என்ற  பாலைவனத்தில் ... தன் தலைவனை நினைத்து தவியாய் தவித்து கொண்டிருந்தாள்...

இங்ஙனம்... இந்த நாள்...சில பேருக்கு ... மனதிற்குள் சந்தோஷம் தரும் நாளாகவும்.... சில பேர்க்கு ...வலி மிகுந்த நாளாகவும் அமைந்தது....

மறுநாள் காலை.... புத்தம் புதிய நாளை போல செங்கதிரோன்... கிழக்கிலிருந்து உதித்து எழுந்தான்...

என்றும் இல்லாத சந்தோஷத்துடன்... ஆதி... இன்று புன்னகை மன்னனாக... எழுந்தவன்....அதே புன்னகையோடு இருந்தவன் ... காலை கடன்களை முடித்து விட்டு காலை உணவை சாப்பிட வெளியே வந்தான்..

💘💘💘என்னவனே....நீ எங்கு இருக்கிறாயாடா...!!!💘💘💘💕💓💕Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ