என்னவன் பகுதி-31

282 6 3
                                    

கவியின் வீட்டிலிருந்து ஓடோடி வந்தவளை கன கச்சிதமாக பிடித்து கொண்டான் ஆதி...

அச்சு வின் பதிலை கேட்டு ஆனந்தப்பட்டவன்... சிரித்து கொண்டே நிற்க....

அந்த வேளையில் அம்பிகா வந்து... அவனது முகமாற்றத்திற்கான காரணத்தை கேட்டார்..

ஆனால் ஆதியோ...ஏதோ சொல்லி மழுப்பி விட்டு தன் அறைக்கு செல்ல..
அம்பிகாவோ.. தன் மகளிடம் குறை பட்டு கொண்டார்...

அவளும் தன் பங்குக்கு மொக்கையாக பதில் சொல்லிருந்தாலும் நிஷாந்த்தின் அழுத முகம் அவளை வாட்டியது...

மதிய சாப்பாட்டை துறந்ததால்...பசி எடுக்க ... சீக்கிரமாக போய் சாப்பிட்டவள்.... பலத்த யோசனைக்கு பிறகு நிஷாந்த்தை அழைத்தாள்..

அவனோ... இவளது அழைப்புக்காக காத்திருந்தவன் போல அவசர அவசரமாக ஃபோனை எடுத்தான்...

அப்புறம் என்ன... காதல் மொழிகள் அவர்களுக்குள் கொஞ்சி விளையாட...
அந்த இன்பத்தில் நனைந்த அச்சு...மன நிறைவுடனே துயில் கொண்டாள்..

ஆதியும்... மறுநாள் கவி வருவாள் என்ற நம்பிக்கையில் ... அந்த இரவை கடத்தினான்...

மறுநாள் விடிந்ததும்...அச்சு வை அவசரப்படுத்தியவன்... ஒரு விதமான சந்தோஷ மனநிலையில்...கிளம்ப...

அவன் எதிர்பார்த்தது போல... கவியும்.. அவர்களுடன்... வந்தாள்..

என்றும் போல் பஸ்ஸில் அவளை தேடினாலும்... அவள் முன்னே சென்று நின்றதும்... இறங்கியவள்... திரும்பி பார்க்காமல் சென்றதும் மனதை என்னமோ செய்தது...

"காலையிலே பேசி அவள் மனதை குலைக்க வேண்டாம் "என்று எண்ணியவன்...அந்தி வேளையை ஆவலோடு காத்திருக்க ஆரம்பித்தான்..

அவன் ஆவலுக்கு துணை புரிந்த பகலவன் வெகு சீக்கிரமாக... மேற்கு நோக்கி பயணமானான்...

மணி 4என அடித்ததும்...மாணவ மாணவிகள்... வகுப்புகளை விட்டு வெளியேறினார்கள்...

ஒரே நேரத்தில்... அனைத்து வகுப்புகளும் முடிவடைவதால்...பஸ் ஸ்டாண்டில்..மாணவர்களின் கூட்டம் அலைமோதியது...

💘💘💘என்னவனே....நீ எங்கு இருக்கிறாயாடா...!!!💘💘💘💕💓💕Where stories live. Discover now