அச்சு நிஷாந்த் திருமணத்திற்கு புடவை எடுக்க சென்றதிலிருந்து கவியின் மேல் ஓர் சந்தேக பார்வை வைத்திருந்தாள் ஷாரி என்கிற ஷாரிகா...
ஆம்.. தீடீரென்று தனியாக சென்று ஆதியும் சாப்பிட்டதே அவளது சந்தேகத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது...
அதை எல்லாம் மெய்ப்பிக்கும் விதமாக தீடீரென்று ஒரு நாள் ஆதி கவியை அழைக்காமல் போக...
பயந்தே போய் விட்டாள் கவி.. அன்று முழுவதும் சாப்பிடாமல் சோகமுடன் வலம் வந்தவள் இரவானதும் அவனது அழைப்பும் வரவும்...
முதலில் கொதித்து போனவள் பின் அவனுடைய காதல் வார்த்தைகளில் மயங்கி செல்லமாக கொஞ்சினாள்...
காதலுடன் பேசி அழைப்பை துண்டிக்கும் தருவாயில் "க்ருஷ்"என்ற வார்த்தையில் முடிக்கவும்..
கேட்டு நின்று கொண்டிருந்த ஷாரிகாவுக்கோ தலை சுற்றியது..
ஏதோ வேண்டா வெறுப்பாகவே சாப்பிட்டு முடித்தவள் தன் அறைக்குள் சென்று ஒவ்வொன்றாக நினைவுகளை சுழற்றி தொடங்கினாள்...
கடைசியாக கவி காதலிக்கும் நபர் ஆதி தான் என்று முடிவை எடுக்க முடியாமல்..தடுமாறியவள் "இருக்காது... அப்படி எதுவும் இருக்காது..."என்று மனதை சமாதானம் செய்தாள்...
அடுத்து வந்த நாட்கள் வேகமாக மிக வேகமாக நகர்ந்து போக..
நிஷாந்த் அச்சுவின் திருமண நாளும் வந்தது..
இரு காதல் ஜோடிகளும் தன் ஜோடிகளின் அழகை பார்த்து ரசித்து மெய்மறந்து நிற்க...
ஷாரிகாவின் மனமோ பெரும் பாரமதை சுமப்பதாய் உணர்ந்தாள்..
மங்கல வாத்தியங்களின் நடுவில் மணமேடைதனில் மணமகன் நிஷாந்த் மணமகள் அச்சுவின் கழுத்தில் தாலி கெட்ட...
சந்தோஷம் பொங்கி வழிந்தது இரு வீட்டு குடும்பத்தாருக்கும்..
அதன் பின் அடுத்த வந்த சம்பிரதாயங்களின் நடுவில் விருந்து அருந்த போன கவியோ..
பரிமாறி கொண்டே வந்திருந்த ஆதியை பார்த்து கண் சிமிட்ட திணறி தான் போனான் ஆதி...
ESTÁS LEYENDO
💘💘💘என்னவனே....நீ எங்கு இருக்கிறாயாடா...!!!💘💘💘💕💓💕
Romance❤️❤️❤️இது என்னோட இரண்டாவது கதை...❤️ ❤️ முதல் கதைக்கு தந்த ஆதரவை போல இந்த கதைக்கும் நீங்க தரணும்னு ஆசைபடுறேன்.... ❤️ 💘💘💘அப்புறம்.. இந்த கதை கறுப்பாக இருக்கும் முரட்டு நாயகனுக்கும்.... ஜாலியாக இருக்கும் நாயகிக்கும் இடையேயான காதல்.....கதை.....💘💘�...