காதல்... காதல்... காதல்....
இந்த மூன்று எழுத்து வார்த்தை ஒரு மனதை எப்படி எல்லாம் புரட்டி போட வைக்கிறது...
சிறு குழந்தை போல தனியாக கொஞ்சவும்... கெஞ்சவும்... சிரித்து... அழுது... யப்பப்பா... என்ன... ஒரு வலியா....சுகமா....சுமையா...என இன்னதென்று சொல்ல முடியாமல்...மனதை பிழிந்து எடுக்கும் ஒரு... உணர்வு....
உணர்வுகளை தாண்டி...உயிரோடு ஒன்றி போகும்... ஒரு அற்புதமான சக்தி அதற்கு உண்டு...
ஆம்...
இதே நிலையில் தான் இருந்தாள் நம்ம அச்சு...
அம்மாவிடம் எப்படியோ பொய் சொல்லி விட்டு தப்பித்து ஓடியவள் போல ஓடியவள்... தன் காதல் எனும் இறக்கையை கொண்டு வானில் சிறகடித்து பறந்தாள்...
தன் தலைவனை காண...
நேராக கவியின் வீட்டிற்கு சென்றவள் கவியை தேடாமல்... நிஷாந்த் தை தேட... எதிர்பாராத விதமாக நிஷாந்த் தன் அறையிலிருந்து வெளியே வர இருவரும் மோதாமல் ...நிற்க... சுமித்ரா வந்து இருவரது மனநிலையும் மாற்றினார்...
நிஷாந்த்ம் எதுவும் பேசாமல்... ஃபோனில் யாரிடமோ பேச...அச்சு.. அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்...
அச்சு...கவிக்காக காத்திருப்பது போல மற்றவர்களுக்கு தெரிந்தாலும்.. நிஷாந்த்க்காக தான் காத்திருக்காலானாள்...
கொஞ்சம் நேரத்தில் நிஷாந்த் வர... தான் பொய் சொல்லி விட்டு வந்ததை... அவன் கேட்க... அப்படியே ஸ்தம்பித்து போனாள் அச்சு...
முதலில் மறுத்தாலும்... அவன் ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல... வாயடைத்து போனாள்...
இதற்கெல்லாம் அணை கெட்டும் விதமாக...கவி வந்து...அச்சுவை இழுத்து கொண்டு போனாள்...
"தன் வீட்டுக்கு வர சொல்லி வற்புறுத்திய அச்சுவிடம் தான் இனி வரப்போவதில்லை " என கண்ணீர் மல்க அழுதாள் கவி..
முதலில் கோபமாக பேசிய அச்சு... அவளின் நிலமை புரிய... அடுத்து எதுவும் பேசாமல் ...அமைதியாகி போனாள்...
YOU ARE READING
💘💘💘என்னவனே....நீ எங்கு இருக்கிறாயாடா...!!!💘💘💘💕💓💕
Romance❤️❤️❤️இது என்னோட இரண்டாவது கதை...❤️ ❤️ முதல் கதைக்கு தந்த ஆதரவை போல இந்த கதைக்கும் நீங்க தரணும்னு ஆசைபடுறேன்.... ❤️ 💘💘💘அப்புறம்.. இந்த கதை கறுப்பாக இருக்கும் முரட்டு நாயகனுக்கும்.... ஜாலியாக இருக்கும் நாயகிக்கும் இடையேயான காதல்.....கதை.....💘💘�...