ஆதி... கோபத்தில் கவியை...அறைந்து வசை சொற்களை கூறிய நேரம் பார்த்து நிஷாந்த் வர...
ஏதேதோ சமாளித்த கவி ...அண்ணனுடனே வீட்டிற்கு வந்தாள்...
அச்சுவோ... தன் அண்ணனின் கேவலமான ...நடத்தையை கண்டு பொங்கி எழுந்தவள் வீட்டில் வந்து.... தனக்கு தெரிந்த உண்மைகளை...உடைக்க...
ஆதியோ ஸ்தம்பித்து நின்றான்...
இவர்களின் உரையாடலை கேட்டு அம்பிகா வெளியே வந்தவர்... அச்சு பாதி உண்மைகளை கூறி...மாட்டி விட... அவருடைய கை... ஆதியின் கன்னத்தை பதம் பார்த்தது..
தன் பங்குக்கு.. தானும் வசைமாரி பொழிந்தவர்... கண்ணீர் மல்க வெளியேற...கூடவே...அச்சுவும்..
ஆதியின் அறையை விட்டு வெளியேறினாள்...திரும்பவும்... ஆதி தன் எதிர்மாறான குணத்தால் கவியை தப்பாக நினைத்து அழுதான்....
இவனின் நிலமை இப்படி இருக்க... கவியும் ... ஆதியின் ஒவ்வொரு வார்த்தையும் கேட்டு... தண்ணீர்...துளிகளுடன்.தன் கண்ணீரையும் பெருக விட்டாள்...
எல்லாத்துக்கும் மேலாக... அச்சு... தான் இத்தனை நாள் காத்திருந்த எதிர்பார்த்திருந்த ... தன் ராட்சசனை நினைத்து.... கனவுலகில் சஞ்சரித்து கொண்டிருந்தாள்....
மறுநாள்....
இளங்காலை வேளையில்..
ஆதவன்... தன் கற்றை கரங்களை கொண்டு.... கிழக்கிலிருந்து உதித்து எழுந்து வந்தான்...
எழுந்தவன் தான் தூக்கத்திலிருந்து விடுப்பட்டது போல... உலகத்திலுள்ள ஜீவராசிகள் அனைவரையும் துயில் எழ செய்வதற்கு....இருட்டு தேவதைக்கு விடுதலை அளித்து ...ஒளி தேவதையை... கடமையாற்ற அழைக்க....
இருள் சூழ்ந்த உலகமோ வெளிச்சம் பட்டு... சுறுசுறுப்பாக இயங்க தொடங்கியது....
ஆனால்... நம் கதையின் நாயகனோ... நேற்று நடந்த சம்பவத்தின் எதிரொலியாக... அம்மாவிடம் நன்றாக திட்டு வாங்கியதும் மட்டுமல்லாமல்...கூடவே கன்னத்தோடு.. வாங்கிய அடியும்...தன் மனது வரை நோகடிக்க... இரவு சாப்பாட்டை துறந்து ....
أنت تقرأ
💘💘💘என்னவனே....நீ எங்கு இருக்கிறாயாடா...!!!💘💘💘💕💓💕
عاطفية❤️❤️❤️இது என்னோட இரண்டாவது கதை...❤️ ❤️ முதல் கதைக்கு தந்த ஆதரவை போல இந்த கதைக்கும் நீங்க தரணும்னு ஆசைபடுறேன்.... ❤️ 💘💘💘அப்புறம்.. இந்த கதை கறுப்பாக இருக்கும் முரட்டு நாயகனுக்கும்.... ஜாலியாக இருக்கும் நாயகிக்கும் இடையேயான காதல்.....கதை.....💘💘�...