என்னவன் பகுதி-43

252 4 2
                                    

அச்சுவை வீட்டிலிருந்து பொய் சொல்லி அழைத்து வந்த கவி...
நிஷாந்த் மற்றும் அச்சு வின் காதலை
சுமித்ரா மற்றும் சித்தார்த் முன்னிலையில் எடுத்து சொல்ல..

குடும்பம் மட்டுமின்றி அச்சுவும் சேர்த்தே திகைத்து போனாள்...

தனக்கு ஏற்கனவே அவர்களின் காதல் தெரியும் என்றும் ...

தன் அண்ணனின் மனநிலை குறித்து தெரியும் என்றும்...

தன் அண்ணனின் வேலை குறித்து தெரியும் என்றும் மிச்சம் வைக்காமல் எல்லாத்தையும் பகிர்ந்து கொண்டாள்..

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத நிஷாந்த் கவியை வசை மாரி பொழியவும்...

அனைத்தும் அறிந்த அச்சுவும் திருப்பி ஏதோ சொல்ல....

சினத்தால் வெகுண்ட நிஷாந்த் அச்சுவை அறையவும்....

சுமித்ரா தன் பங்குக்கு நிஷாத்தை அறைந்து அச்சு தான் தன் மருமகள் என்று சொல்லி முடித்தார்..

நிஷாந்த்தோ தன் தவறை உணர்ந்து அச்சுவோடு மன்னிப்பு கேட்கவும் முதலில் முடியாதவள்...

அவனின் நீர் நிறைந்த விழிகளை கண்டு கரம் பற்றி கொண்டாள்..

இருவரும் சந்தோஷத்துடன் மாடியை விட்டு கீழே இறங்கி வரவும்..

சுமித்ராவும் கவியும் எங்கேயோ செல்வது போல் ரெடியாகி கொண்டு நின்றிருக்க...

"எங்கே போறீங்க மா "என்று நிஷாந்த் கேட்கவும்..

"அச்சுவின் வீடு வரை சென்று பெண் கேட்கப்பதாக சொல்லவும்..."

திகைத்து போய் நின்றனர் இருவரும்

நிஷாந்த்"ம்மா... என்னம்மா சொல்றீங்க..."

"ஆமாடா...உனக்கு அவளை புடிச்சிருக்கு... அவளுக்கும் உன்னை புடிச்சிருக்கு... அப்புறம் எதுக்கு லேட் பண்ணணும்..."

"அதில்லம்மா... வந்து.... நான்..
வந்து..."

"நீ எதுவும் சொல்ல வேணாம்.. நான் எல்லாம் பார்த்துக்கலாம்...நீ போய் முதல்ல ரெடியாகு..."

💘💘💘என்னவனே....நீ எங்கு இருக்கிறாயாடா...!!!💘💘💘💕💓💕Donde viven las historias. Descúbrelo ahora