என்னவன் பகுதி -56

344 8 10
                                    

மங்கல நாளிலே மங்கல வாத்தியங்கள் முழங்க மல்லிகை பூவால் அலங்கரித்த மணமேடையதனில் அச்சுவின் கழுத்தில் மாங்கல்யம் சார்த்தினான் நம்ம நிஷாந்த்..

அடுத்து வந்த சம்பிரதாயங்கள் அனைத்தும் சுமூகமாக நடந்தேறிட..

நம்ம ஹீரோ ஹீரோயின் காதலும் ரொமான்ஸ்ம் கூடவே நடந்தேறியது..

கடைசியாக புதுப்பெண் தன் புகுந்த வீட்டை நோக்கி புறப்பட தயாராக...

அதுவரை மறந்திருந்த அவளது மோதிரம் ஒன்று ஞாபகம் வர..

அதை எடுக்க முதலில் கவி ஓட பின்னாடியே ஷாரிகாவும் ஓடினாள்..

நேராகி மணமகள் அறையில் வந்து மோதிரத்தை எடுக்கும் தருவாயில் ஆதி அவளது புடவையின் தோற்றத்தில் மயங்கி காதல் பானத்தை இதழ் வழியா எடுக்க..
கூடவே சம்மதம் தெரிவித்தாள் ஆதி..

ஆனால் வெளியே ஓர் அரக்கி அனைத்தையும் கவனித்து கொண்டிருப்பதை இருவருமே அறியவில்லை..

நேரம் கடந்து செல்லவும் வேறு வழியின்றி பிரியா இருவரையும் தேடி வர..

அவளது அழைப்பில் ஆதியும் கவியும் நிலமைக்கு வந்து விலகி கொண்டனர்..

நேராக மணமகள் அறையில் வந்த பிரியா கவியிடம் கலிப்போடு பேசியவள் போதாக்குறைக்கு ஷாரிகா பற்றி கேட்க..

ஒருவழியாக நிமிடம் அதிர்ந்து போனாள் கவி..

அந்த நேரம் பார்த்து ஷாரிகா மணமகன் அறையில் இருந்து வரவும் இருவரும் கேலியாக சிரிக்க...

கடும்சினத்தை மனதில் வைத்து கொண்டு வேண்டா வெறுப்பாகவே சிரித்து வைத்தாள் ஷாரிகா..

மூவரும் சேர்ந்து வந்ததும் கார் புறப்படவும் சரியாக இருக்க..

மணமகளாய் வந்த அச்சுவை கண்டு ஒரு வித படபடப்போடு இருந்த சுமித்ராவை அனைவரும் சேர்ந்து கேலி செய்தனர்..

ஆனால் ஷாரிகாவோ தன் கோபத்தை கண்ணீரை வெறுப்பாக மாற்றி ஒருவித வில்லி போல் தன்னை ஆவேசமாக சூட்சுமமாய் பேசி கொண்டாள்..

💘💘💘என்னவனே....நீ எங்கு இருக்கிறாயாடா...!!!💘💘💘💕💓💕Onde histórias criam vida. Descubra agora