என்னவன் பகுதி-38

268 4 0
                                    

நீண்டதொரு பிரச்சினை முடிவுக்கு வந்தது போல ஆதி கவி காதல் ஒரு முடிவுக்கு வந்தது..

பலத்த சந்தேகங்களையும் சங்கடங்களையும் மனதில் சுமந்து கொண்டு நடந்த இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து தெரிந்து கொண்டு இனிமேல் தங்களால் பிரிந்து இருக்க முடியாது என்று தங்கள் காதலை மற்றவர்களிடம் அறிவிக்க...

இருவரின் இதயங்களும் ஆனந்தத்தால் துள்ளி குதித்தது..

மறுநாள் காலை என்றும் போல் இல்லாமல் ஆதி காலையில் சீக்கிரமே எழுந்து அச்சு விடம் மல்லுக்கு நிற்க..

அம்பிகாவோ அச்சுவின் வாயை அடைத்தார்..

அதை மனதில் கொண்டு நடந்த அச்சு சரியான நேரத்தில் ஆதியின் காலை வாரிவிட...கடுப்பாகி தான் போனான்..

பஸ்ஸிலிருந்து இறங்கியதும் ஆதி தன் தங்கையிடம் இனி மாட்டி முழிக்க கூடாது என்று அவசரமாக முன்னே சென்றாலும் கவியை காத்து மாடிப்படியில் காத்திருக்க தான் செய்தான்..

மாலையும் இதே நிலை தொடர்ந்தாலும் அச்சு காலையில் சொன்ன விஷயம் உண்மை தானா என்று..
தன் மனதில் உள்ள சந்தேகத்தை கவி ஆதியிடம் கேட்டதும் மறைக்காமல் உண்மையை சொன்னான் ஆதி ‌..

அது போலவே கவியும் தன் நிலையும் அதே தான் என்று எடுத்து கூறியதும் துள்ளி குதித்தான் ஆதி..

இந்த காதல் உள்ளங்களின் மனது இதே போல ஒவ்வொரு நாளும் அழகாக தொடர...

ஒரு நாள் அச்சுவின் கூட வரும் ஆதியை காணவில்லை..

அச்சுவிடம் கேட்க தயங்கியவள் பின்னாடி பார்த்து கொண்டே வர..

அவளின் நிலமை அறிந்த அச்சு தன் அண்ணன் காலையிலே சென்று விட்டதாகவும்... அவசரத்தில் ஐடி கார்டை கூட மறந்து போய் விட்டதாகவும் கூற ‌‌...

கையில் வாங்கி பார்த்த கவியோ அதிர்ச்சி அடைந்தாள்..

ஏன் என்றால் மறுநாள் ஆதியின் பிறந்த நாள்..

எதிர்பார்க்காத தருணத்தில் எதிர்பாராத விதமாக அவனின் பிறந்த நாளை என்று தெரிந்து அதிர்ந்து தான் போனாள் கவி...

💘💘💘என்னவனே....நீ எங்கு இருக்கிறாயாடா...!!!💘💘💘💕💓💕Where stories live. Discover now