தீடீரென்று வீட்டிற்கு வந்த நிஷாந்தின் குடும்பத்தை கண்டு அதிர்ச்சியாகி போனார்கள் அச்சுவின் குடும்பத்தினர்..
வந்த விஷயத்தை காலதாமதமின்றி சித்தார்த் எடுத்துரைக்க...
அணுகுண்டு வெடித்தது போல் அனைவர் முகத்திலும் ஒர் ஈயாடவில்லை....
கவியோ மனதில் திக்திக் என்ற உணர்வை மனதில் மறைத்தாலும் அச்சுவோ அப்பட்டமாக வெளிகாட்டி கொண்டிருந்தாள்...
ஆதிக்கும் முதலில் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும்...நிஷாந்தின் குணங்கள் ஏற்கனவே அவனுக்கு தெரிந்ததால் அவனுக்கும் சரியெனவே பட்டது...
கொஞ்சம் நேரம் அமைதிக்கு பின் சசிதரன் தன் முடிவை கண் ஜாடையில் அம்பிகாவிடம் தெரிவிக்க...
அலங்கரிக்கப்பட்ட தேவதையாக அச்சுவை அழைத்து வந்தார் ...
பின் இரு குடும்பத்தாரும் சகஜமாக பேசி திருமண தேதியை கூடிய விரைவிலேயே வைக்க முடிவு செய்தனர்...
அச்சுவுக்கும் நிஷாந்த்திற்கும் சந்தோஷம் கரைபுரண்டு ஓட....
புன்னகை முகமாய் விடைபெறும் தருவாயில்..தனக்கு ஒரு புத்தகம் ஒன்று மறந்து வைத்து விட்டதாக கவி வண்டியிலிருந்து இறங்கி ஓடினாள்..
நேராக மாடிக்கு ஓடியவள் ஆதியின் அறைக்குள் செல்ல....
அவனோ காதல் மொழியால் வசப்படுத்தி அவள் அருகில் வரவே..
கிடைத்த புத்தகத்தை கையில் எடுத்து கொண்டு கீழே ஓடினாள்.....
மூச்சிரைக்க ஓடி வந்தவளை வெளியே நின்று அனைவரும் வியப்போடு பார்க்க....
அச்சு மட்டும் ஏதோ எண்ணி கண் அடித்தாள்..
போடி ..."என்று பல்லில் வைத்து பேச...
"ஏன் கவி இவ்வளவு மூச்சிரைக்க வாற..."என்று அம்பிகா கேட்க..
"அது...வந்து... வந்து...."என்று தடுமாறி போக...
"இவங்க உன்னை விட்டுட்டு போவாங்கனு நினைச்சு ஓடினியா...."என்று எடுத்து கொடுக்க...
YOU ARE READING
💘💘💘என்னவனே....நீ எங்கு இருக்கிறாயாடா...!!!💘💘💘💕💓💕
Romance❤️❤️❤️இது என்னோட இரண்டாவது கதை...❤️ ❤️ முதல் கதைக்கு தந்த ஆதரவை போல இந்த கதைக்கும் நீங்க தரணும்னு ஆசைபடுறேன்.... ❤️ 💘💘💘அப்புறம்.. இந்த கதை கறுப்பாக இருக்கும் முரட்டு நாயகனுக்கும்.... ஜாலியாக இருக்கும் நாயகிக்கும் இடையேயான காதல்.....கதை.....💘💘�...