முகவுரை

427 63 28
                                    

என் வாசக கண்மணிகளுக்கு கத்திரிப்பூவின் அன்பு வணக்கங்கள்!!!

கதிர் முல்லையை கதைநாயகர்களாக கொண்டு நான் எழுதும் இரண்டாவது கதையிது. முதல் கதையை ஆரம்பித்த பொழுதே அது தமிழ் எழுத்து வடிவில் இருந்திருந்தால் நன்றாய் இருக்குமென்ற எண்ணம் இங்கு நிறைய பேருக்கு இருந்திதது. ஆனாலும் வாசகர்களின் ஆசைக்காக அதனை தமிங்கிலத்தில் எழுத நேர்ந்தது. ஒரு முழுக்கதையும் தமிழில் எழுதிவிட ஒரு உள்ளார்ந்த தேடல் என்னுள் இருந்து கொண்டிருந்தது அதன் வெளிப்பாடே இந்த "அழற்கதிரின் முகிலவள்."

அழல் என்றால் நெருப்பு என்றொரு பொருள். இந்த அழலை கதிர்களாக தெறிக்க விடுவதால் கதிரவன், 'அழற்கதிர்' எனவும் பெயர் பெறும்.

முகில் என்பது மேகம், காற்றடுக்கின் மேலாக வளிமண்டலத்தில் மிதக்கும், சிறிய நீர்த்துளிகள் உறைந்த பளிங்குத்துகள்கள். முகிலவள் என்பதை மேகமானவள் என பொருள் கொள்ளலாம்

இங்கே "அழற்கதிரின் முகிலவள்" என்பது தகிக்கும் சூரியனை குளிர்விக்கும் மேகம் அவள்.

இக்கதையின் கரு ஊஞ்சலுடன் இணைந்தே வளர்ந்தது ஆதலால் இவ்விரண்டறிக்கும் சில ஒற்றுமை இருக்கக்கூடும். ஊஞ்சலை போலவே இந்த கதையும் உங்களுக்கு பிடிக்கும் என்பது எனது எண்ணம் மட்டுமன்று ஆசையும் கூட. என்னுடன் இணைந்து இதை படித்து குறைநிறை இருந்தால் என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். ஏதேனும் வார்த்தையோ வாக்கியமோ புரியாத பொழுது தயங்காமல் கேட்டுவிடுங்கள்

என்றும் தொடரும் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும்,

நன்றிகளுடன்,

கத்திரிப்பூ !...

அழற்கதிரின் முகிலவள்Where stories live. Discover now