முகில் - 05

331 76 46
                                    


நம் மனது எளிதாக பிறரின் தவறுகளை அடுக்கடுக்காய் சுட்டி காட்டும், ஆனால் தன்னுடையது என்றுவிட்டால் அப்படியெல்லாம் உடனே ஏற்றுக்கொள்ளாது. அதை நியாயப்படுத்த அதன் சார்பாய் வாதாடி தன் மேல் குற்றமில்லை என்றே காட்டிக்கொள்ளும். இன்னும் ஒருபடி மேலே சென்று தான் செய்ததாலேயே அந்த தவறை தவறே இல்லை என்று கூட அடித்துக்கூறும் குணம் அதுக்கு.

கதிரும் இதற்கெல்லாம் விதிவிலக்கல்லவே, ஆனாலும் தவறென்று ஓன்று செய்யாமல் வாழ்வு முழுதாய் திசை மாறுமா? என தன்னை தானே அலசி தனக்குள்ளே போராடி கொண்டிருந்தவன் வேறுபட்ட உணர்வுகளின் குவியலை தாங்க முடியாமல் ஓய்ந்து உறக்கத்தை மட்டுமே துணையாக கொண்டான்.

தனித்திருப்பதும் சோம்பியிருப்பதே மூளையை உலைகளனாக ஆக்குவதை உணர்ந்தவன், மறுநாள் விடியுமுன்னமே அவனுக்கான வேலையை பார்க்க கிளம்பியிருந்தான்.

வழக்கம்போல் பாண்டியன் எழுந்து தயாராக, பார்த்திருந்த லட்சுமி "கதிரு பண்ணைக்குத்தான் போயிருக்காண்ங்க, வேணும்னா நீங்க இன்னும் கொஞ்ச நேரம் தூங்குங்கலாமே" என

பதிலுக்கு பாண்டியன் மனைவியை அழுத்தமாய் பார்த்துவிட்டு வழக்கத்தை தொடர அவரது பார்வையின் அர்த்தம் புரிந்த லக்ஷ்மி அதன்பின் ஒன்றும் சொல்லவில்லை

அடுத்த இருபது நிமிடத்தில் பாண்டியன் அவர்களது பண்ணைக்கு வந்து சேர, கதிர் அங்கே தெரிந்த வேலையை வெகு லாவகமாய் செய்துகொண்டிருந்தான்.

கறவைக்கும் நிற்கும் மாடுகளை, பால் கறக்கும் கறவையர்களை, கறந்தப்பாலை,அதை அளந்து ஊற்றும் குடுவைகளை, அவர்கள் சொல்லும் அளவுகளை அத்தனையையும் கவனித்துக்கொண்டு.

நிற்பவர்களை நகர செய்து, ஓடுபவர்களை நிதானிக்க செய்து. வேண்டியதை கேட்டு, கேட்டதை கொடுத்து என இது என் இடம், எனக்கான வேலை, என்னைவிட யாரும் இதை சரியாக செய்துவிட முடியாது என்ற நிமிர்வுடன் அவன் அங்கே அவர்களுடன் கலந்திருந்தான்.

அழற்கதிரின் முகிலவள்Where stories live. Discover now