பாண்டியன் காலையில் கடைக்கு கிளம்பிக்கொண்டிருந்தார் , லட்சுமி அவருக்கு இரண்டாவது காபியை ஆற்றியபடியே கொண்டு வந்து தர, வாங்கப்போனவரை தடுத்தது அவரது அலைபேசியின் அழைப்பொலி.
அதனை கையிலிடுத்தவர், கேட்ட செய்தி அத்துணை உவப்பாய் இல்லை "எப்போடா....எங்க சேர்த்திருக்க.. சரி இரு இதோ... இதோ வரேன் " என பதட்டமானார்
"யாருங்க, என்ன ஆச்சு" என லட்சுமியும் கவலை கொள்ள
'வேலுதான்.. சந்திராக்கு முடியலையாம், மலர் ஆஸ்பத்திரில சேர்த்திருக்கானாம்.. " என்றபடி தோளில் துண்டை போட்டு கொண்டே நடக்க
"நானும் வரவா " என லட்சமி பின் சென்றார்.
"இல்ல நான் போய்ட்டு போன் பண்றேன், பிள்ளைங்க எங்க இருக்கோ. சாப்பாட்டை ரெடி பண்ணு " என மனைவிக்கு உத்தரவிட்டு அண்ணனின் மருமகளை பார்க்க சென்றார்.
கண்ணன் பிறக்கும் வரை அண்ணனும் தம்பியும் தோட்டத்தையும் பண்ணையையும் மட்டுமே பார்த்துக்கொண்டு பண்ணை வீட்டிலியே தான் இருந்தனர் இரு குடும்பமும். குழந்தைகள் வளர வளர, இடப் பற்றாக்குறை பெரிதாய் தெரிந்ததில் முதலில் சங்கரன்தான் பழைய வீட்டை தாண்டி தோட்டத்திற்குள் சற்று மேடான இடத்தில் கொஞ்சம் வசதியாக வீட்டை கட்டினார் .
எனக்கு உனக்கு என்ற பிரிவினை இல்லாமல் குழந்தைகளுக்காக என இருந்தால் எல்லாருக்கும் அதில் சந்தோசமே. பெண்ணின் மேலிருந்த அன்பில் ராசாத்தி இல்லம் என்று பெயரிட்டு, கிரக பிரவேசம் முடித்திருக்க, அனைவர்க்கும் அத்துணை சந்தோஷமும் திருப்தியும். பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவரும் ஓடி ஆடி அசந்து விட, பெரியவர் அத்துணை பெரும் அலுப்பில் தூங்கி கொண்டிருந்த அதிகாலையில் , புது வீட்டை சுற்றி இருந்த குப்பையை கூட சென்ற சங்கரனின் மனைவி அங்கே பாம்பு தீண்டி இறந்துபோனார்.
தாள முடியா துக்கத்தில் மொத்த குடும்பமும் ஆட்டம் காண புது வீட்டிற்கு சாதாரணமாய் போக கூட அனைவருக்கும் மனமில்லை.
YOU ARE READING
அழற்கதிரின் முகிலவள்
General Fictionகாலத்தின் கட்டாயம் விதிக்கப்பட்ட விதி, எங்கோ யாருக்கோ பிறந்து எப்படியோ வளர்ந்து பிரிந்து யாருக்காக அவதரித்ததோ அதனுடன் வந்தினையும் உயிரின் விதி வழி பயணமிது. #கதிரின்முல்லை முல்லைகதிர் #கதிர் #முல்லை #தமிழ்நாவல் #குடும்பநாவல் #விதி #காதல் #அன்பு