முகில் - 11

268 49 29
                                    

வேலன் வந்து காத்துக்கொண்டிருந்தான் தன் சித்தப்பாவிற்காக , அவர் மதிய உணவிற்கு வரும் நேரத்தை உத்தேசித்து வந்திருந்தவன், பாண்டியன் இன்னும் வந்து சேராமலிருக்க லட்சுமியுடன் பேருக்கு எதையோ பேசிக்கொண்டிருந்தான் சுவரில் மாட்டிருந்த கடிகாரத்தை பார்த்துக்கொண்டு

சரியாக பாண்டியனும் வந்து விட, "வேலன் ரொம்ப நேரமா உங்களுக்காக காத்திட்டு இருக்கான், இன்னைக்குனு, நீங்க இம்புட்டு நேரமாக்கிடீங்க" என்று குறைபட்டு கொண்டார்

பாண்டியன் "கடைக்கே வந்திருக்கலாமேடா, நான் குமரேசன் சாப்பிட்டு வர லேட்டா ஆயிருச்சுனு அங்கேயே உட்கார்ந்துட்டேன்"

"இருக்கட்டும் சித்தப்பா நீங்க வீட்டுல இருப்பீங்கனு நேரா வந்துட்டேன்"

"நீயும் வந்து சாப்பிடு வேலா" என்றபடி அவன் முகத்தில் இருந்த புரிபடாத உணர்வை யோசனையோடு பார்த்துக்கொண்டிருந்தார்

"இருக்கட்டும் சித்தப்பா, நான் சாப்பிட்டாச்சு. உங்ககிட்ட கிட்ட பேசணும்னு பார்த்தேன்"

"ஏன் லட்சுமி, நீயாவது இவன் வந்தவொடனே என்ன கூப்பிட்டுருக்கலாமே?" என்றார்

லட்சுமி அவருக்கு உணவை பரிமாறிக்கொண்டே பதில் சொல்லும்முன், எப்போதும் அந்த நேரத்தில் வீட்டிற்க்கு வராத கதிரும் வந்து சேர, "கதிரு, நீயும் வாயேன் சாப்பிட" என அழைத்தார்

கதிர் அப்பாவை கண்காட்டி மறுத்து விட்டு வேலனை விசாரித்து கொண்டே அவன் அருகே அமர்ந்தான்.

" நீ வர எப்படியும் ராத்திரி ஆகும்னு சித்தி சொன்னாங்க , எதுவும் மறந்துட்டு போய்டியா" என கேட்டான் வேலனும்

"அதெல்லாம் இல்லை, ஒருத்தர பார்க்க போகணும்னு இருந்தேன் அவர் நாளைக்கு வர சொல்லிட்டாரு அதான் வீட்டுக்கே வந்துட்டேன், நீ என்ன இந்த நேரத்துல" என்றிட

அப்பா வரட்டும் என செய்கை செய்தான் தம்பிக்கு, பாண்டியன் வந்து எதிரில் அமர கதிர் எழுந்து கொள்ள போனான் அவர்கள் பேசிக்கொள்ளட்டும் என

அழற்கதிரின் முகிலவள்Where stories live. Discover now