முகில் - 01

547 73 63
                                    

இரவின் திரையை கிழித்து விடிவெள்ளி முகம்காட்ட, சில்வண்டுகளின் ரீங்காரம் இசையாய் தாலாட்ட ஊரெல்லாம் தூக்கத்தில் அசந்திருக்கும் வைகறையின் முதல் நாழிகை.. தடதடவென நெஞ்சம் பதற தூக்கம் களைந்து சட்டென எழுந்தமர்ந்தார் லட்சுமி, அந்த வீட்டின் கிரஹலட்சுமி.

விழிப்பு தட்டியவுடன் தொண்டை வறண்டிருப்பது போலிருக்க, கட்டிலில் உறங்கும் கணவர் ண்முகபாண்டியனை எழுப்பிவிடாமல் மெதுவாக எழுந்து கதவை திறந்து கூடத்திற்குள் நுழைய, அந்த நேரத்திலும் கூட அங்கே திரைபாடல் ஒலித்தது.

இது வழக்கமாய் நடப்பது தானே மனதில் தோன்றிட, அவர் வரவேற்பறைக்கு வர அங்கே சோபாவில் குப்புற படுத்திருந்தான் பாண்டியன் லட்சுமியின் இளைய மகன் கண்ணன்.

தலையை அசைத்து அவனது வாடிக்கையை மனதிற்குள் நிந்தித்தவர் அவன் கெட்டியாக பிடித்திருந்த செல்போனை மெதுவாக உருவி, கீழே கவிழ்ந்து கிடந்த புத்தகத்தையம் அதனோடு சேர்த்து டீபாயில் வைத்தார். ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியை அணைத்துவிட்டு சமையலறைக்கு சென்று தண்ணீரை குடித்து, பதறும் மனதை சமன்படுத்த முயன்றவர், நேரே பூஜையறைக்கு வந்து அமர்ந்துவிட்டார்.

கைகூப்பி முன்னிருந்த தெய்வத்தை பார்த்தவர் "மனசுக்கு என்னமோன்னு இருக்குசாமீ , யாருக்கும் எந்த கொறையும் வராம பார்த்துக்க " என வேண்டிக்கொண்டே அங்கே மனையில் அடுக்கி வைத்திருக்கும் பத்திரிகையை கையில் எடுத்து "என்புள்ளை கல்யாணம் நல்லபடியா நடக்கணும், நானு உன்னதான் மலைபோல நம்பிருக்கேன் " என வேண்டிக்கொண்டார்

ஏதென்று விளங்காத இனம்புரியாத சோகம் நெஞ்சை பிசைய,

தாயவளின் மனம் தன் பெற்ற மக்களையே சுற்றிவந்தது. இளையவன் இங்கே சுகமாய் உறங்க, தனியே இருக்கும் தலையவனுக்குதான் ஏதும் தீங்கோ, அவனது துணையாகி வரப்போகும் புது மகளுக்குத்தான் நோவோ என மனம் பந்தாட, காக்கும் கவசமாய் கந்த சஷ்டியை மனதில் உருப்போட்டுக்கொண்டே, கையிலிருந்த பத்திரிகையில் மணமக்கள் பெயரை விரலால் வருடி மெதுவாக சொல்லி பார்த்தார்

அழற்கதிரின் முகிலவள்Where stories live. Discover now