முகில் - 08

307 60 57
                                    

அமுதம் பால் உணவுகள் (Amutham Dairy Products) என்கிற பெயர் பலகையை தாங்கி கொண்டு, ராமபுரத்தில் இருந்தது கதிரின் சிறிய அலுவலகம். பண்ணையில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் நகரத்திற்குள் நுழையும் இடத்தை தேடிப்பிடித்து தனது அலுவல் இடத்தை அமைத்திருந்தான் கதிர்.

அதோ இதோ என்று அவன் ஊருக்கு வந்து, கிட்டத்தட்ட பதினாறு மாதம் ஆகிவிட்டிருந்தது. இரவும் பகலும் அவனது முயற்சியை இடைவிடாமல் செய்தும் இன்று வரை, அமுதம் டைரி முழுதாய் அவன் எண்ணபடி உருவாகிவிடவில்லை. இன்னுமே அரசின் ஒப்புதல் சரியாக கிடைக்கப்பெறாமல் வங்கி கடனும் பாதியில் நிற்க , காலம் மட்டும் நகர்ந்துகொண்டிருக்கிறது.

முன்புறத்தில் தொழில் முறையில் சந்திக்க வருபவர்கள் காத்திருக்கும் சிறு கூடமும், அதனை தொடர்ந்த அலுவகமும் இருக்க, நிர்வாக மேலாளர்கென ஒதுக்க பட்ட அறையில் அவனது இருக்கையில் அமர்ந்து, கைவிரகளால் வலது புருவத்தை நீவியபடி தன் முன்னே, முக்கால் மணிநேரமாய் பேசி கொண்டிருக்கும் பெரியவரை பார்த்துக்கொண்டிருந்தான்.

அவர் கதிரின் பிரியமான தாடிக்கொம்பு ஆறுமுகம் பெரியப்பா, லட்சுமிக்கு மாமன் மகன். அடிப்படையில் எல்லாரிடமும் பிரியமான ஆறுமுகம், அத்தை மகளையும் அவள் பெற்ற செல்வங்களையும் பார்க்க கிடைத்த நேரதிலெல்லாம் வந்து நிற்பார் சிறுவயது முதலே, முறைக்கு அத்தான் என்றாலும் லட்சுமிக்கு இன்னொரு அண்ணன் போல் தான் தாய்மாமன் மகன் காட்டும் அன்பும் ஆதரவும்.

ஆறுமுகம் ஒரு காலத்தில் பெரிய பால் பண்ணை முதலாளி, பிள்ளைகள் வளர்ந்து குலத்தொழிலை பார்க்க மறுக்க, கிடைத்த விலைக்கு பண்ணையை விற்றுவிட்டு பிள்ளைகளை அண்டி வாழாமல் இருந்தால் போதுமென, தனக்கு பிடித்தவாறு நாட்களை தள்ளி கொண்டிருக்கிறார்

உழைப்பாளி யாராக இருந்தாலும் வலியே சென்று தன்னால் ஆன உதவியை செய்வது அவரது இயல்பு, இன்று அவரது இயலாத காலத்திலும் கூட, அவர் வந்து நிற்பது மகன் போன்ற கதிரின் மேலுள்ள அன்பிலும் அவரது தொழிலில் மேலுள்ள பக்தியிலும்.

அழற்கதிரின் முகிலவள்Where stories live. Discover now