முகில் - 12

233 51 43
                                    

எப்போது வருவான்? தெரியாது. எந்த நாள் வருவான் ? தெரியாது. ஏன் அவன் வந்துசெல்லும் சுவடே தெரியாது. ஆனால் சரியான பாடத்தை புகடாமல் அனுபவம் என்னும் ஆசான் விட்டு சென்றதே இல்லை. அனைவரின் வாழ்விலும் இதுவே மாறாத நியதி. சென்றதை விட்டுவிட்டு அது தந்ததை மட்டும் பற்றிக்கொண்டால் அந்த பாடத்தில் எளிதாக வெற்றி பெற்றிடலாம்.

வாசலை நிறைத்து பூப்பூவாய் கோலமிட்டு கொண்டிருந்தார் லட்சுமி, அதிகாலை தாண்டியிருந்தது நேரம். காலை வெயில் முன் கட்டு வரை பரவி இருக்க, வேகமாய் அவர் கோலத்தை முடித்து எழ அங்கு ஆட்டோவில் வந்திறங்கினான் கதிர்.

திங்களும் செவ்வாயும் சென்னையில் வேலை இருப்பதாக கடந்த வாரத்தில் சொல்லி இருந்தவன் அன்று நடந்த நிகழ்வில் , வியாழக்கிழமை இரவே கிளம்பியிருக்க லட்சுமி என்ன செய்வது என்று அறியாமல் தவித்து கொண்டிருந்தார்.

மகனை கண்டித்து பழகாதவர், மருகி நின்று பார்திருக்க கதிர் "அம்மா, அப்பாட்ட நான் அவசர வேலையா கிளம்பிடேனு சொல்லுங்க, அவர் முகத்த பார்த்து இந்த கல்யாண பேச்சை எடுக்காதீங்கனு என்னால சொல்ல முடியாது. அவர் தேடுறப்ப நான் இங்க இல்லைனாலே அவரு புரிஞ்சுக்குவாரு.." என்றபடி சென்னை செண்டிருந்தான்.

இதோ செவ்வாய் காலையே அவன் வந்திறங்க முகம் மலரவே வரவேற்றார் "வா சாமி, இன்னைக்கு வந்திருவேனு சொல்லவேயில்லை, நீ ராத்திரி ரயிலிலேரிட்டாவது ஒரு போனு போட்ருக்கலாமே" என பரபரத்தார்

"அதுனால என்னம்மா " என சிரித்து கொண்டே அவன் உள்ளே வர முற்றத்தில் அமர்ந்திருந்தார் சௌந்திரம். லட்சுமியின் அண்ணன் மனைவி, அந்த நேரத்திலேயே அவர் அங்கிருக்க ஏன் என்ற கேள்வியுடன் உள்ளிருக்க "நல்லா இருக்கீங்களா " என்றான் கலவரத்துடன்

"நல்லா இருக்கேன் கதிர், மதினி நீ வெளியூர் போயிருக்கீனு சொன்னாங்க, பயணமெல்லாம் சுகந்தானே " என்றார் அவரும்.. "ஹ்ம்ம்" என்றவன் பொதுவாய் தலையசைத்து விட்டு மேலே சென்றான் அவனதறைக்கு.

அழற்கதிரின் முகிலவள்Where stories live. Discover now