முகில் - 09

296 53 55
                                    

உலகுக்கே நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தாலும் கதிருக்கு ஏனோ நத்தையாக அவை நகருவது போல் இருந்தது. அதுவும் கடந்த இரு நாட்களை நெட்டி தள்ளி கொண்டிருந்தான் தனது அறையில். உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருத்தவன் அலைபேசியை எடுத்து மணி பார்க்க விடிவதற்கு இன்னும் நேரமிருந்தது.

சபா மகளின் காது குத்து விழா முடிந்த கையோடு ஊருக்கு கிளம்பியிருந்தான். அன்று அவனுடன் சென்று பார்த்து விட்டு வந்த அமைச்சரின் உதவியாளர், அமுதத்தின் அனுமதிக்கும் உதவுவதாக உறுதியளித்தபடி சபா கிளம்பிய இரண்டு வாரத்தில் அழைத்து அமைச்சரை பார்க்க ஆவண செய்திருந்தார்.

அப்போது ஊரிலிருந்த அவர்களது மற்றொரு பங்காளர் சுந்தரை வரசொல்லிவிட்டு, சந்தானத்தையும் உடன் அழைக்க அவர் மறுத்து பாண்டியனை அனுப்பி வைத்தார்.

அப்பா துணை வந்த தைரியத்தில் வெகு சரளமாக அமுதத்தை பற்றிய திட்டங்களை அவன் அமைச்சரிடம் சொல்லி முடிக்க, அமுதத்தின் அவசியத்தை அவர் பங்கென பாண்டியனும் பேசிட, கேட்டவர் முகத்தில் ஒரு மெச்சுதலான பார்வை.

ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை எந்த காலத்திலும் அரசால் மட்டுமே உறுதி படுத்த முடியாது என அறிந்தவர் பாண்டியன். தானும் தான் சேர்ந்த மக்களுக்கும் அடுத்த நிலைக்கு நகர தனி மனித உந்துதலும், எளிய மக்களுக்கான சிறுநிதி(Micro finance ) வளர்ச்சி மட்டுமே அதை தரும் என நம்புவர் அதை வெளிப்படுத்த. அதை அவரது பேச்சில் அறிந்து கொண்ட அமைச்சரும் அரசும் சுயநிதி குழுக்கள், கூட்டுறவு வங்கிகளின் கடன் உதவி என்று கிராமப்புற மக்களுக்கு விளம்பர படுத்தினாலும் பெரும்பாலானோர் அதை பற்றிய தெளிவு இல்லாமல் இருப்பதாக, வருத்தப்பட்டவர் அவர்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, இயன்றவரை ஒப்புதல் வழிமுறைகளை துரித படுத்த பரிந்துரை செய்வதாக சொல்லி அனுப்பி வைத்தார்.

இந்திய அரசாங்கம் அரசியல் வாதிகளால் மட்டும் நடப்பதில்லை, அரசாங்கம் என்னும் இயந்திரம் இயங்குவது அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கையில் மட்டுமே என்ன அடுத்த ரெண்டு மாதத்தில் நன்றாய் அறிந்துகொண்டான் கதிரும்.

அழற்கதிரின் முகிலவள்Where stories live. Discover now