முகில் - 15

455 56 40
                                    

கதிரை வீட்டில் பார்க்கவே முடிவதில்லை நேரம் கெட்ட நேரத்தில் வருவதும் விடிவதற்குள் கிளம்பி செல்லுவதுமென இருக்க இன்னும் அவனிடம் விஷயத்தை சொல்லவில்லை. இவர்கள் சொல்வதற்குள் சபா மூலம் விஷயம் தெரிந்தால் நடக்கூடிய அனர்த்தங்களை நினைத்து மருகியவர் அப்பாவையும் மகனையும் மனதிற்குள் வறுத்து எடுத்துக்கொண்டிருந்தார்.

கதிருக்கு முல்லையை பேசுவதை பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுதே பாண்டியன் கோபமாக எழுந்து சென்றுவிட லட்சுமி மிகவும் பயந்து விட்டார். பொதுவாக அவர் அப்படியெல்லாம் செய்வதில்லை ஆரம்பகால திருமண வாழ்வில் கூட பேசி கொண்டிருக்கும் பொழுது எழுந்து வெளியே செல்பவர் இல்லை அவர். நிதானமாக தவறை சுட்டிக்காட்டி அதை சரிசெய்யும் வழியும் சொல்லி தருபவர். பெரிதாக மனவேறுபாடுகள் அன்றி துணையின் நினைப்பை புரிந்து கொண்டு இருவரும் வாழ்ந்து வந்திருந்தனர் இத்துணை காலமும்.

இரவு வெகு நேரமாகியும் பாண்டியனும் கதிரும் வீடு திரும்பாமல் இருக்க தனியாக இருக்கவே மனதை வதைத்தது அந்த பாராமுகம். கதிர் படிப்பு வேலையென சில வருடங்களாக வெளி ஊரில் இருந்து விட, கண்ணன் மட்டும் அவருக்கு துணை இருந்தார். அவனும் இப்பொழுது மேல்படிப்பிற்கென வெளியூர் சென்றிருக்க தன் மனதை பகிர்ந்துகொள்ள கூட ஆள் அன்றி தனியே தவித்தவர் விடியும் முன்பே ஒரு முடிவுக்கு வந்தே முல்லை வீட்டை தேடி சென்றார்.

லட்சுமி முல்லையின் வீட்டுக்குள் வர கூடத்தில் இருந்த சந்தானம் முகத்தில் ஒரு மிளிர்வு "வாம்மா லட்சுமி " என்றவர் குரலில் இருந்த ஏதோ ஒன்று லட்சுமியை உள்ளே அழைத்துக்கொண்டு வந்த பார்வதிக்கு தைரியத்தை தந்தது. அதற்குள் அமுதாவும் வந்துவிட வழக்கமான சம்பிரதாய விசாரிப்புகள் இரு பக்கமும்.

பார்வதி தந்த பானத்தை பருகியவர் பேச்சை வளர்க்க முடியாமல் தடுமாற, சந்தானம் "பாண்டியன் என்ன சொல்லறான்மா, நேத்து முருகன் கடைக்கு போய்ட்டு வந்தான்.. நான் பார்த்து ஒரு வாரம் போல ஆச்சு.." என்றிட

You've reached the end of published parts.

⏰ Last updated: Mar 08, 2023 ⏰

Add this story to your Library to get notified about new parts!

அழற்கதிரின் முகிலவள்Where stories live. Discover now