மாயம் - அத்தியாயம் 2

118 3 0
                                    

இரண்டு நாட்களில் துருவ்வும் ஜெய்யும் தங்கள் ஊரை வந்தடைந்தனர்.

பல வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு வருவதால் சுற்றியும் பார்த்தபடியே இருவரும் நடந்தனர்.

ஜெய், "என்னலே நம்மூரு இம்புட்டு மாறி போய் கிடக்குது..." என ஆச்சர்யப்பட,

"சிட்டி போய் படிச்சும் நீயும் உன் பேச்சும் மாறாம இருக்குறதுக்காக நம்ம ஊரும் அப்படியே இருக்குமா என்ன.." என ஜெய்யைக் கிண்டல் செய்தான் துருவ்.

அவனை முறைத்து விட்டு ஜெய் முன்னே நடக்க, சிரித்துக் கொண்டே அவனைப் பின் தொடர்ந்தான் துருவ்.

திடீரென ஜெய் துருவ்வின் கைப் பிடித்து அவன் நடையை நிறுத்தவும் அவனைக் கேள்வியாக ஏறிட்டான் துருவ்.

ஜெய் கை காட்டிய திசையைப் பார்த்த துருவ்வின் கண்கள் கோபத்தில் சிவந்தன.

ராஜதுரை கோவமாக அவர் முன் நின்ற வயதான ஒருவரின் சட்டையைப் பிடித்து அவரை அடிக்கக் கை ஓங்க, அவரின் கரம் பாதியிலேயே நின்றது.

தன்னைத் தடுத்தது யாரென்று திரும்பிப் பார்க்க, ராஜதுரையின் கையை இறுக்கிப் பிடித்தபடி நின்றிருந்தான் துருவ்.

ராஜதுரையின் அடியாள்கள், "ஏய்..." எனக் கத்திக் கொண்டு துருவ்வை நோக்கி வர, அவர்களைத் தன் பார்வையால் அடக்கினார் ராஜதுரை.

துருவ் ராஜதுரையின் கையை விடுவித்து விட்டு அவர் பிடியிலிருந்து அந்த வயதானவரின் சட்டையை விடுவித்தான்.

துருவ், "பார்க்க பெரியவர போல இருக்கீங்க... ஆனா உங்கள விட வயசுல மூத்த ஒருத்தர அடிக்க கைய நீட்டுறீங்க.." என ராஜதுரையிடம் அமைதியான குரலில் அழுத்தமாக கேட்டான்.

ராஜதுரை, "யாருலே நீயி... உன்ன இங்குட்டு பார்த்ததே இல்லையே... எங்க ஊருக்கு வந்து என்னையே எதிர்த்து நிக்கிறியாலே..." என்றார் கோபமாக.

"தப்ப தட்டி கேக்குறதுக்கு யாரு எந்த ஊரு எதுவும் முக்கியம் இல்ல..." என துருவ் பதிலளிக்கவும் அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த ராஜதுரை,

மாயம் செய்வாயோ!!! (முடிவுற்றது)Where stories live. Discover now