மாயம் - அத்தியாயம் 7

88 2 0
                                    

அமேலுவைத் தொடர்ந்து வீட்டினுள் நுழைந்த முத்துராசு சுவற்றில் பெரிதாக மாட்டி மாலையிட்டு இருந்த புகைப்படத்தைக் கண்டு கண் கலங்கினான்.

அலமேலு பார்க்கும் முன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டவன் முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு அங்கிருந்த கதிரையில் அமர்ந்தான்.

அலமேலு, "எலேய்... கண்ணுங்களா... நம்ம வூட்டுக்கு யாரு வந்திருக்காய்ங்கன்னு வந்து பாருலே..." என சத்தமாக அழைக்கவும் அறையிலிருந்து வெளியே வந்த இருவரும் முத்துராசுவைக் கண்டு அதிர்ந்தனர்.

ஜெய், "அண்ணே... எப்போ அண்ணே வந்தீய..." என்றவன் முத்துராசுவைக் கண்ட மகிழ்ச்சியில் அவனை அணைத்துக் கொள்ள,

பதிலுக்கு ஜெய்யை அணைத்து விடுவித்த முத்துராசு, "இப்போ தான்லே வந்தேன்..." என்றவன் இன்னும் அதிர்ச்சியில் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த துருவ்வைப் பார்த்து,

"எலேய் துருவா... என்னலே அப்படி பார்க்குறீய... அண்ணன் வந்தது உனக்கு பிடிக்கலயா..." எனக் கேட்டான் புன்னகையுடன்.

முத்துராசு அவ்வாறு கேட்கவும் உடனே ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்ட துருவ், "என்ன அண்ணா நீ இப்படி கேட்டுட்ட... நீ வந்தது எனக்கு எப்படி அண்ணா பிடிக்காம போகும்... எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா... ஆனா நீ ஊருக்கு வர மாட்டியோன்னு நினைச்சேன்... அதான் அண்ணா உன்னைப் பார்த்ததும் ஒரு நிமிஷம் ஷாக் ஆகிட்டேன்..." என்க,

சிரித்த முத்துராசு, "என்னலே இப்படி கேட்டுப்புட்ட... இது என் ஊருலே... நான் எப்படி இங்குட்டு வராம இருப்பேன்..." என்றான்.

மூவரையும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த அலமேலுவைக் கண்ட ஜெய், "என்ன ஆத்தா... இனிமே உன்னைக் கையிலயே பிடிக்க முடியாது போலயே... உன் மூத்த புள்ளயும் வந்துட்டான்... இனிமே எங்க ரெண்டு பேரும் உன் கண்ணுக்கு தெரியுமோ என்னவோ..." என்றான் கேலியாக.

அவனை முறைத்த அலமேலு, "போலே பொசக்கட்ட பயலே... வந்துட்டான் என் கிட்டையே லந்து பண்ணிட்டு... மூணு பேருமே இந்த ஆத்தாக்கு ஒன்னு தான்லே... நீயி மூணு பேரும் இல்லன்னா இந்த கட்டை எப்பவோ போய் சேர்ந்து இருப்பேன்..." எனக் கண் கலங்கக் கூற,

மாயம் செய்வாயோ!!! (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora