மாயம் - அத்தியாயம் 8

78 2 0
                                    

"எவன்லே அந்த எடுபட்டபய... காலங்காத்தால வந்து கதவைத் தட்டிட்டு இருக்கான்... இவியலால ஒரு சோலிய ஒழுங்கா முடிக்க முடியுதா..." என வெகு நேரமாக வாசல் கதவு வேகமாகத் தட்டப்படும் ஓசையில் எரிச்சலுடன் கூறியவாறு அலமேலு சென்று கதவைத் திறக்க,

"ஹாய் ஆத்தா..." எனப் புன்னகையுடன் கை அசைத்தான் ஒரு நெடியவன்.

அலமேலு, "யாருக்கு யாருலே ஆத்தா... போக்கத்தவனே... நான் என்ன உன்ன பெத்தேனா இல்ல வளர்த்தேனாலே... வந்துட்டான் ஆத்தா கீத்தான்னு சொல்லிட்டு..." எனக் கோபமாகக் கூறவும் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்ட எதிரில் இருந்தவன்,

"என்னைத் தெரியலையா ஆத்தா..." என்றான் சோகமாக.

அதில் புன்னகைத்த அலமேலு, "உன்ன எப்படிலே தெரியாம போகும்..." என்கவும் எதிரிலிருந்தவன், "அதானே பார்த்தேன்..." எனப் புன்னகையுடன் கூற,

"பனை மரத்துக்கு பாதி வளர்ந்து கெட்டு இருக்க... உன்ன எப்படிலே என் கண்ணுக்கு தெரியாம போகும்..." என அலமேலு கோபமாகக் கூறவும் சோகமாக முகத்தைத் தொங்கப் போட்டான் எதிரில் இருந்தவன்.

வெளியே கேட்ட சத்தத்தில் தூக்கம் கலைந்து கொட்டாவி விட்டபடி எழுந்து வந்த முத்துராசு, "என்ன ஆத்தா இம்புட்டு காலங்காத்தால சத்தம் போட்டுட்டு இருக்கீய... என்னாச்சு..." என்கவும் முத்துராசுவின் பக்கம் திரும்பிய அலமேலு,

"எழுந்திட்டியா ராசா... ஆத்தா உன்ன எழுப்பிட்டேனாலே... எல்லாம் இந்த எடுபட்ட பயலால... காலங்காத்தால வந்து வம்பு பண்ணிட்டு இருக்கான்..." என வாசலில் நின்றிருந்தவனை முறைத்துக் கொண்டு கூற,

வாசலை எட்டிப் பார்த்த முத்துராசு அங்கு நின்றிருந்தவனைக் கண்டு அதிர்ந்தவன், "எலேய் கஜா... எப்போலே வந்தீய..." என்கவும் இவ்வளவு நேரம் அலமேலின் திட்டை வாங்கிக் கொண்டிருந்த கஜாவோ, "வந்து ரொம்ப நேரம் ஆச்சுண்ணே... நம்ம ஆத்தா தான் வந்த நேரத்துல இருந்து என்னை வையுறாப்புலே...." என்றான் சோகமாக.

அலமேலு, "யாருலே இவன்... உன் கிட்ட காசு ஏதாவது கேட்டு வந்திருக்கானாலே... ஒத்தப் பைசா கொடுக்காதேலே..." என முத்துராசுவிடம் கூறவும் அதனைக் கேட்டு சிரித்தான் முத்துராசு.

மாயம் செய்வாயோ!!! (முடிவுற்றது)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ