மாயம் - அத்தியாயம் 19

60 2 0
                                    

இன்றும் பிடிவாதமாக அருணிமா துருவ்வின் மடியில் படுத்திருக்க, அவளின் நிலையை எண்ணி எதுவும் கூறாது அமைதி காத்தான் துருவ்.

துருவ்வின் பார்வை தொலைக்காட்சியில் இருக்க, கால்களை ஆட்டி ஆட்டி தாடையில் விரல் பதித்து ஏதோ யோசித்த அருணிமா திடீரென, "அது யாருலே மாமா? ஏன் அவிய ஃபோட்டோ நம்ம வூட்டுல மாட்டி கிடக்குது?" என ஜெய்யின் மாலையிட்ட புகைப்படத்தைக் காட்டிக் கேட்கவும், வெளி வரத் துடித்த கண்ணீரை கடினப்பட்டு அடக்கிய துருவ், "உனக்கு அவர் அண்ணன் போல... என்னோட ப்ரதர்... இப்போ இல்ல... இறந்துட்டான்..." என்றான் ஜெய்யின் புகைப்படத்தை வெறித்தபடி.

"ஓஹ்... அண்ணாத்த..." என அருணிமா கூறவும் அதிர்ந்த துருவ், "எ...என்ன சொன்ன நிரு... உனக்கு அவன ஞாபகம் இருக்கா?" என ஆர்வமாகக் கேட்கவும் முழித்த அருணிமா, "இல்ல மாமா... நீ தானேலே சொன்னீய அவர் எனக்கு அண்ணாத்தன்னு..." எனப் பயந்தவாறு கூறவும் முகம் வாடிய துருவ், "ஓஹ் சாரி... நீ தூங்கு..." என்கவும் துருவ் இன்று வாங்கித் தந்த பார்பி பொம்மையை அணைத்துக் கொண்டு துருவ்வின் மடியிலே உறங்கினாள் அருணிமா.

அவளின் முகத்தையே வெறித்தவனின் கண் முன் தன் சிறு வயதில் நடந்த சம்பவமொன்று வந்து சென்றது.

_______________________________________________

சாதிக் கலவரத்தில் துருவ்வின் தந்தை இறந்து சில நாட்கள் கழித்து துருவ் கோவில் தெப்பக்குளத்துப் படிக் கட்டில் அமர்ந்து குளத்தையே வெறித்துக் கொண்டிருந்தான்‌.

அப்போது அவனுக்கு ஐந்து வயது. அலமேலுவுடன் கோவிலுக்கு வந்திருந்தவன் அவர் ஏதோ நேர்த்திக்கடனை முடித்து வரும் வரை அங்கு காத்திருந்தான்.

துருவ்வின் தந்தை இறந்து விட்டதை அறிந்தவன் முதலில் தனிமையிலேயே நேரத்தைக் கழிப்பான்.

ஆனால் அலமேலு என்ன கூறினாலும் மறுக்காது கேட்பான்.

திடீரென அவன் அருகில் பாவாடை சட்டை அணிந்த ஐந்து வயது சிறுமி ஒருத்தி வந்து அமர்ந்தாள்.

மாயம் செய்வாயோ!!! (முடிவுற்றது)Место, где живут истории. Откройте их для себя