மாயம் - அத்தியாயம் 10

81 2 0
                                    

"எம்புட்டு தைரியம் இருந்தா என் வூட்டு உப்ப தின்னுட்டு என்னையே எதிர்த்து நிற்பீய..." என ராஜதுரை ஆவேசமாக வினவ,

"எம்புட்டு நாள் தான் உங்களுக்கு கீழயே இருக்குறது ஐயா... நாமளும் முன்னேறி வர வேணாமா... உங்க வூட்டு உப்ப தான்லே தின்னோம்... அதுக்காக நாம தனியா நிக்கவே கூடாதாலே..." என அவர் முன் நின்றிருந்தவன் எதிர்க் கேள்வி கேட்கவும் அவனை ஓங்கி அறைந்த ராஜதுரை,

"ஆமாலே... நீயி என்னைக்கும் எனக்கு கீழ தான் இருக்கணும்.... சோத்துக்கே வழியில்லாம நின்ன நாய குளிப்பாட்டி நடு வீட்டுல வெச்சி சோத்த போட்டா நீயி இப்போ என்னையே எதிர்த்து நிக்கிறியாலே... அதை என் கிட்டே தில்லா சொல்ற பார்த்தியலா... இந்த ராஜதுரைக்கு கீழ தான் அம்புட்டு பேரும் கொங்காப்பயலே..." என்றார் கோபமாக. (கொங்காப்பய -அறிவற்றவன்)

"அதுக்கு நீயி உசுரோட இருந்தா தானேலே..." என்றவன் தன் பின்னே மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து ராஜதுரையை வெட்ட கை ஓங்கியவன் மறு நிமிடமே ராஜதுரையின் காலின் கீழ் விழுந்தான் கழுத்து அறுபட்டு.

ராஜதுரை தன் முகத்தில் தெறித்த இரத்தத்தைத் தன் கரத்தால் துடைத்தவாறு கண்களைத் திறக்க, அவர் முன் இரத்தக்கறை படிந்த அருவாளைக் கையில் ஏந்தியவாறு குரூரப் புன்னகையுடன் நின்றிருந்தான் அவன்.

தன் முன் இறந்து விழுந்து கிடந்தவனின் தலை மீது தன் ஒரு காலை வைத்து மிதித்த ராஜதுரை, "பார்த்தியாலே... சாவும் போது கூட எனக்கு கீழ தான் நீயி... நாதாரிப்பயலே... வந்துட்டாய்னுங்க என்னையே எதிர்த்து நிற்க..." என்றவர் சுற்றியிருந்த தன் அடியாட்களைப் பார்த்து,

"அம்புட்டு பேரும் கேட்டுக்கோலே..‌. இந்த ராஜதுரைய எதிர்த்து நிக்கனும்னு நெனச்ச... இது தான்லே உங்க கதியும்..." என்றார் வக்கிரச் சிரிப்புடன்.

பின் கையில் அருவாளுடன் தன்னைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தவனை நோக்கிய ராஜதுரை, "வந்துட்டான்யா என் மயேன்... எலேய்... வாலே.. வந்து உன் ஐயன கட்டிப்பிடிச்சுக்கோலே..." எனப் புன்னகையுடன் கூறவும் கையிலிருந்த அருவாளை தரையில் எரிந்து விட்டு தன் தந்தையை அணைத்துக் கொண்டான் மாரி.

மாயம் செய்வாயோ!!! (முடிவுற்றது)Opowieści tętniące życiem. Odkryj je teraz