மாயம் - அத்தியாயம் 17

57 2 0
                                    

"போதுமுங்கய்யா... இதுக்கு மேல குடிச்சா உங்க உடம்பு என்னத்துக்கு ஆகும்லே..." என மாரி ராஜதுரையின் கரத்திலிருந்த மதுக் கோப்பையை வாங்கப் பார்க்க, அவன் கரத்தை தட்டி விட்ட ராஜதுரை, "தள்ளிப் போலே... என் ஆத்திரம் அடங்க தான் இம்புட்டு குடிக்குறேன்... அந்த கீழ் சாதிக்கார நாய இப்பவே வெட்டி போடுற வெறில இருக்கேன்லே..." எனக் கோபமாகக் கூறவும், "அவன நான் பார்த்துக்குறேன் ஐயா..." என்றான் மாரி.

ராஜதுரை, "என்னலே பார்த்துக்குறீய? நீ பார்த்த லட்சணம் தான்லே அந்தப் பயலு திரும்ப உசுரோட வந்து இருக்கான்..." என ஆவேசமாகப் பேசவும் மாரி அமைதியாகத் தலை குனிந்தான்.

ஆனால் தன் தந்தை முன் அவமானப்பட்டு நிற்பதற்கு காரணமான துருவ் மீது மாரிக்கு கொலை வெறி வந்தது.

"அவன கொன்னுட்டு தான்லே மறு வேலை பார்ப்பேன்... அவன கொல்லணும்... அந்த ****சாதிக்கார நாய கொல்லணும்..." என ராஜதுரை போதையில் உளற, தன் கைப்பேசியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான் மாரி.

மாரி யாருக்கோ அழைக்கப் பார்க்க, அதற்குள் அவனின் கைப்பேசி ஒலி எழுப்பியது.

புருவ முடிச்சுடன் மாரி அவ் அழைப்பை ஏற்று காதில் வைக்க, "என்னலே... அப்பனும் புள்ளயும் ஃபேக்டரி பறிபோன சோகத்துல சுத்திட்டு இருக்கியா..." என மறுபக்கம் இருந்து ஏளனமாகக் கேட்கவும், "ஏய்... எம்புட்டு தில்லு இருந்தா எங்க ஃபேக்டரி மேலயே கை வெச்சி இருப்பியேலே... அந்த ஜெய்யப் போட்டது போலவே உன்னையும் உன் பாசக்கார தம்பி துருவ்வையும் போட்டுத் தள்ளாம விட மாட்டேன் முத்துராசு..." எனக் கோபத்தில் கத்தினான் மாரி.

மாரியின் கத்தலைக் கேட்டு சத்தமாக சிரித்த முத்துராசு, "உன்னால எங்க...." என நிறுத்தியவன், மாரி, "ஏய்...." எனக் கத்தவும், "இதைக் கூட புடுங்க முடியாதுடா... நீ சரியான கோழைடா... அதான்லே பின்னால நின்னு முதுகுல குத்துற... தில்லு இருந்தா ஒத்தைக்கு ஒத்த சண்டைக்கு வாலே பொட்ட..." என தெரிந்தே மாரியின் கோபத்தைத் தூண்ட, முத்துராசு எதிர்ப்பார்த்தது போலவே ஆவேசமடைந்த மாரி, "யாரைப் பார்த்துலே பொட்டன்னு சொன்ன... வரேன்லே... இப்பவே வரேன்... உன்ன என் கையால கொன்னு போட்டா தான் என் ஆத்திரம் அடங்கும்...." என்றவன் கோபத்தில் தன் கைப்பேசியைத் தூக்கி தரையில் அடித்து விட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு முத்துராசுவைக் காணப் புறப்பட்டான்.

மாயம் செய்வாயோ!!! (முடிவுற்றது)حيث تعيش القصص. اكتشف الآن