மாயம் - அத்தியாயம் 14

66 3 0
                                    

இரண்டு வருடங்களுக்குப் பிறகு

அன்று திருவம்பட்டி ஆட்சியர் அலுவலகமே பரபரப்பாக காணப்பட்டது.

சனத் திரள் வரிசை கட்டி நிற்க, தன் ஆட்களுடன் அங்கு வந்து சேர்ந்தார் ராஜதுரை. கூடவே மாரியும் இருந்தான்.

இந்த இரண்டு வருடங்களில் ராஜதுரையிடம் பெரிதாக ஒரு மாற்றமும் நிகழ்ந்திருக்கவில்லை.

வேண்டும் என்றால் அவரது மீசை மட்டும் அரை இன்ச் அதிகமாக வளர்ந்து இருக்கும்.

கீழ் சாதி என ராஜதுரையால் ஒதுக்கித் தள்ளப்பட்டவர்களும் அக் கூட்டத்தில் இருக்க, ராஜதுரையின் வருகையைக் கண்டதுமே அவர்களின் மொத்த எதிர்ப்பார்ப்பும் வடிந்து போனது.

அவர்களைக் கேவலமாகப் பார்த்த ராஜதுரை, "எலேய் மாரி... எப்போலே அந்த புது கலெக்டர் வருவாரு... இவியலுக்கு சொல்லு... எப்படியும் அந்த புது கலெக்டரும் நம்ம பேச்ச தான் கேட்டு ஆகணும்னு... இல்லன்னா எம்புட்டு நாளைக்கு தான் இங்குட்டு இருக்க முடியும்..." எனக் கூறி இகழ்ச்சியாக சிரிக்க, அவருடன் மாரி உட்பட ராஜதுரையின் ஆட்கள் அனைவருமே ஏதோ நகைச்சுவையைக் கேட்டது போல் சிரித்தனர்.

அதனைப் பார்த்து கீழ் சாதி மக்கள் வருத்தப்பட, அவர்களில் ஒருவன், "எலேய்... இனிமே நம்ம இங்குட்டு இருந்து ஒரு பிரயோசனமும் இல்லலே... எப்படியும் அந்தாளு வரப் போற புது கலெக்டரையும் கைக்குள்ள போட்டுக்குவாரு... கிளம்புலே அம்புட்டு பேரும்..." என்க, "செத்த நேரம் இருலே... வந்தது வந்துட்டோம்... இருந்து பார்த்துட்டு தான் போலாமே... நமக்கு என்ன இப்படி ஏமாறுறது புதுசா..." என ஒருவன் கூறவும் அனைவரும் அதனை ஆமோதித்தனர்.

சற்று நேரத்திலே ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் ஒரு வெள்ளை நிற சைரன் வைத்த அரச மகிழூந்து வந்து நிற்கவும் அவ் இடமே அமைதியானது.

"எலேய்... எடுலே அந்த மாலைய..." என்ற ராஜதுரை மாரியின் கையிலிருந்த மாலையை வாங்கிக் கொண்டு மகிழூந்தின் அருகில் சென்றார்.

மாயம் செய்வாயோ!!! (முடிவுற்றது)Where stories live. Discover now