மாயம் - அத்தியாயம் 28

59 2 0
                                    

ராஜதுரை கோபமாக கட்சி ஆஃபீஸில் இருந்து வெளியே வர, அவர் முன் ஒரு காவல்துறை வண்டி வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் ராஜதுரையிடம் வந்து தயங்கியபடி‌ நிற்க, "என்னலே? எதுக்குலே இங்குட்டு வந்திருக்க... போன வாரம் தானே கை நெறய துட்ட வாங்கிட்டு போனீய..." எனக் கோபப்பட,

"ஐயா... அது வந்து..." என இன்ஸ்பெக்டர் இழுக்குவும், "எலேய்... வெறசா சொல்லித் தொலை... மனுஷன் இருக்குற கடுப்பு தெரியாம இவன் வேற..." என்றார் ராஜதுரை கடுப்புடன்.

இன்ஸ்பெக்டர், "பண மோசடிக்காக உங்கள அரெஸ்ட் பண்ணி கோர்ட்டுல ஆஜர் படுத்த சொல்லி கோர்ட்டுல இருந்து வாரண்ட் வந்து இருக்குது ஐயா..." எனத் தயங்கித் தயங்கி கூறவும் ஆத்திரமடைந்த ராஜதுரை, "யார அரெஸ்ட் பண்ணணும்னு சொல்றீய... எம்புட்டு தில்லு இருந்தா என்னையே அரெஸ்ட் பண்ண வந்து இருப்பியேலே நாதாரிப் பயலே..." என்க, "என்னை மன்னிச்சிருலே ஐயா..." என்ற இன்ஸ்பெக்டர் ராஜதுரை மறுக்க மறுக்க அவர் கரங்களில் விலங்கைப் பூட்டி வண்டியில் ஏற்றினார்.

_______________________________________________

"என்னை எங்குட்டு தம்பி கூட்டிட்டுப் போறீய... அந்த மனுஷன் பார்த்தா உனக்கு தான் பிரச்சினை ஆகிடும்லே..." என திடீரென வந்து தன்னை எங்கோ அழைத்து வந்த துருவ்விடம் விஜயா கேட்க,

"ஒரு நிமிஷம் இருங்கம்மா... நீங்களே பார்க்க தானே போறீங்க..." என்ற துருவ் தன் வீட்டு கதவைத் திறக்க, "இது யாரு வூடு தம்பி? என்னை எதுக்கு இங்குட்டு கூட்டிட்டு வந்து இருக்கியேலே..." என விஜயா புரியாமல் துருவ்விடம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே உள்ளிருந்து, "மாமா..." எனக் கத்திக் கொண்டு ஓடி வந்த அருணிமா விஜயாவைக் கண்டு வாசலிலே தயங்கி நிற்க, அருணிமாவைக் கண்ட விஜயாவிற்கு பேச்சே எழவில்லை.

விஜயாவின் கன்னங்களைத் தாண்டி விழிநீர்‌ வடிய, "அருணி..." என அருணிமாவின்‌ முகத்தை வருட, அவளோ விஜயாவைக் கண்டு பயந்து துருவ்வின் கரத்தைப் பிடித்துக் கொள்ளவும்‌ விஜயா அதிர்ச்சியில் துருவ்வைப் பார்க்க, "அம்மா... நீங்க உள்ள வாங்க... நான் சொல்றேன்‌ என்ன நடந்ததுன்னு..." என்றான் துருவ்.

மாயம் செய்வாயோ!!! (முடிவுற்றது)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ