🌤சூரியனே 15

207 36 98
                                    

மனோன்மணியின் கடந்த காலங்கள் தந்த அனுபவங்கள் இதுவரை அவளை யாருடனும் நெருங்கி பழகவிட்டதில்லை. அவளுடைய தூய்மையான நட்பினை குப்பையில் கொட்டியது அவளது குடும்பமும் இந்த சமுதாயமும். யாருடைய பேச்சிற்கும் ஆளாக விரும்பாதவள் தன் வட்டத்தை சுருக்கிக்கொண்டாள். ஆனால் அது தவறு என்று புரிய எட்டு வருடங்கள் ஆகியிருந்தது. யாருக்காக தன் உணர்வுகளையும் மனதினையும் கட்டுப்படுத்திக்கொண்டாள்?  என்ற கேள்வி அவளுக்கே எழுந்தது .

அவளின் மாற்றம் நிச்சயம் ஜோயலினால் தான் என்றால் மிகையில்லை. ஆரம்பத்தில் அவனை தூர நிறுத்தினாள் தான். ஆனால் எந்நேரமும் எதாவது ஒன்றை பேசி சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் அவனை பட்டென பேசி நிறுத்த அவளுக்கு வழிவகை தெரியவில்லை. எவ்வளவு நேரம் பேசினாலும் கண்களை விட்டு அவன் பார்வை இறங்காததை அவள் கவனித்திருக்கிறாள். அந்த ஒருக்காரணமே அவளிடம் அவனை பிடித்து நிறுத்த காரணமாகயிருந்தது.

டைனிங் டேபிளில் அமர்ந்து மடிக்கணினியைத் தட்டி எதோ குறிப்பு எடுத்துக்கொண்டிருக்கும் மதனாஞ்சலியை  பார்த்தவாறு ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்திருந்தாள் மனோன்மணி.

மனோன்மணிக்கு வலது புறமிருந்த இருக்கையில் அமர்ந்து அதன் கைப்பிடியில் முழங்கையை வைத்து கன்னத்தை தாங்கியவாறு மனோன்மணியையும் மதனாஞ்சலியையும் பார்த்திருந்தான் ஜோயல் ரிஷிகேஷ் .

இப்போது தான் வந்தான். அவனை இருவருமே கவனிக்கவில்லை. அவரவர் சிந்தனையில் மூழ்கியிருந்தனர். விநாயகமூர்த்தி மாடியிலிருந்து அப்போது தான் இறங்கிவந்தவர் ஜோயலைக்கண்டதும் வரவேற்க்கும் விதமாக அவனை அழைக்கப்போக , உதட்டில் ஒரு விரல் வைத்து அமைதி காட்டியவன்

" ஸ்ஸ்.... ஹாய் " என சமிஞை செய்ய, அவரும் அவனை போலவே கையசைத்தவர்

" டீ எடுத்துட்டு வரேன் இருங்க " என்று சமிஞை செய்ய, அவன் சரியென தலையசைக்கவும் அடுப்பறை சென்றார்.

சிறிது நேரத்தில் மனோன்மணி கண்டு கொள்வாள் என்று அமைதி காத்தவன் அப்பொழுதும் அவள் கவனியாதது கண்டு முழுதுமாக அவள் சிந்தை இங்கில்லை என்று எண்ணி, செருமிக்காட்ட முதலில் அதையும் அவள் கவனிக்கவில்லை.

ஆகாயச் சூரியனே Where stories live. Discover now