🌤சூரியனே 56

182 24 24
                                    

மணப்பெண்ணையும் மாப்பிள்ளையையும் அழைத்துச்சென்று நண்பர்கள் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தார்கள் . இறுக்கைகளின் இறுதி வரிசையில் கூட்டம் கூட்டிருந்தார்கள் அவர்கள் . மனோன்மணி நடுநயமாக இருக்க வலது புறம் ஜோயலின் அம்மாவும் இடது புறம் அவன் பாட்டியும் அமர்ந்திருக்க சுற்றி நின்றார்கள் மற்ற பெண்கள் . ராதிகாவும் மதிவதனியும் ரஞ்சிதமும் கூட அதில் அடக்கம் .

ஜோயலின் தாய் அவளின் கையைப்பற்றியிருந்தவர் " மனோ நான் உன்ன நல்லா பாத்துக்கிறேன் . குட்டிம்மாவையும் நல்லா பாத்துக்கிறேன். எங்க குட்டியை கல்யாணம் பண்ணிக்கிறியா " சிறுகுழந்தையிடம் கைட்பது போல் அவர் கேட்க , மெலிதாக சிரித்தவளுக்கோ சிறிது சங்கடமாக இருந்தது . அவர் திடீரென இப்படி கேட்பாரென அவள் எதிர்பார்த்திருக்கவில்லை .

அவள் இப்படி சிக்கிக்கொண்டதை பார்த்து ஜோயல் தலையிலேயே கைவைத்துவிட்டான் . அவனை பார்த்து மனோன்மணி முறைக்க இவனுக்கு  பயம் .

' போச்சு எல்லாம் போச்சு . இனி வாழ்க்கை முழுதும் நான் சிங்கிள் தான் போல . கார்னர் பண்ணா நான் ஒத்துக்கனுமான்னு வீம்புக்குனாதும் மாட்டேன்னு தான் சொல்லுவா . பேசாம நம்மலே டீல் பண்ணிருந்திருக்கனும்.  அம்மாவ கூப்பிட்டது தப்பாப்போச்சு . சரி எல்லாரும் போனதும் கால்ல விழுந்தாவது சம்மதம் வாங்கிடனும் ' ஜோயல் ஒரு பக்கம் புலம்பிக்கொண்டிருக்க

" சரிங்கம்மா " என்ற மனோன்மணியின் குரலில் நெஞ்சடைக்க நின்றுவிட்டான் .

இவள் சம்மதம் சொன்னதும் பட்டாளம் மொத்தம் கூச்சலிட சிறிது கூச்சம் இவளிடம் . எதிலிருந்தோ விடுதலை பெற்றவனாக அவன் அப்படியே அமர

" அப்பா " என்று வியந்து சிரித்த சின்னவளை

" பேபி " என்று கழுத்தோட கட்டிக்கொண்டான் . அந்த நிமிடம் அவனுக்கு இழைப்பாருதல் போல?!

அடுத்தடுத்த வேலையை கவனிக்க எல்லோரும் நகர்ந்துவிட ஜோயல் மந்தரித்துவிட்டவனைப்போல் மனோன்மணியிடம் பேச அவள் பின் அழைந்து கொண்டிருந்தான் . அவனுக்கு இன்னும் அதிர்ச்சி தெளிந்திருக்கவில்லை . கனவா என்றும் கூட நினைக்கத்தோன்றியது .

ஆகாயச் சூரியனே Where stories live. Discover now