⛅சூரியனே 51

166 23 16
                                    


"மேடம் என்ன திடீர்னு ஃபோன் பண்ணி பாக்கனும்னு சொன்னிங்க. ஃபோன்ல பேசமுடியாதளவுக்கு ரொம்ப பெரிய விசயமா என்ன"  என்றான் விக்னேஷ்.

அவனை முறைத்த மனோன்மணி "நான் உன்னைத்தானே வரச்சொன்னேன். நிறை மாசப்பொண்ணு அவளையும் ஏன்டா இவ்வளோ தூரம் இழுத்துட்டு வந்த. கொஞ்சமாவது மண்டைல எதாச்சும் இருக்கா உனக்கு" என்க

சிரிக்கும் ரேவதியை முறைத்தவன் "மணி நான் அப்பவே சொன்னேன். இவ தான் வந்தே தீருவேன்னு நின்னுட்டா. இவங்க மாமா வீடு இங்க தான் பக்கத்துல. இரண்டு நாள் முன்னாடி தான் இங்க வந்தாங்க. டெலிவரியும் இங்க தான் பாக்கப்போறாங்க. நான் இங்க இருந்து தான் கூட்டி வந்தேன். ஊர்ல இருந்து ஒன்னும் இல்ல. நான் இதுக்கே வேணாம்னு தான் சொன்னேன். இவ தான் உங்களப்பாத்தே ஆகனும்னு சொல்லிட்டா. நீ சும்மா என்னையே திட்டாத" என்று குழந்தையாய் முறுக்கிக்கொண்டவனிடம்

"அச்சச்சோ!!!! சாரிடா தம்பி கோச்சுக்கிட்டியா!!!! கோச்சுக்கோ கோச்சுக்கோ நல்லா கோச்சுக்கோ" என்று மனோன்மணி கிண்டலடிக்க

விக்னேஷ் "அக்காஆஆஆ..." என்று எரிச்சலடையவும் மனோன்மணியும் ரேவதியும் பலமாக சிரித்தார்கள்.

"வந்ததுமே சங்கத்த கூட்டியாச்சா" என்றவாறு வந்த விநாயகமூர்த்தி தட்டினை டேபிளில் வைத்தார்.

"அப்பா நீங்க வந்த வேலையை மறந்துட்டு முழு சமையல்காரராகவே மாறிட்டிங்க" என்று விக்னேஷ் பட பாணியில் சொல்லியவன்

"மணி கொஞ்சமாவது சமைக்கக்கத்துக்னும்னு உனக்கு நினைப்பேயில்லையா" தட்டிலிருந்த தேனீரை எடுத்தவாறு கேட்டான்.

பாவமாக முகத்தை வைத்தவள் "நான் எதுவும் கத்துக்காம இல்ல. எல்லாமே செய்யத்தெரியும். ஆனா அதை யாராலையும் சாப்பிட முடியத்தான் இல்ல. என்னாலயே அதை ஸ்மெல் பண்ணக்கூட முடிலடா. ஏன்னே தெரில சமையலுக்கும் எனக்கும் ரொம்ப தூரமாகிடுச்சு" என்றாள்.

"அதுக்குத்தான் நான் இருக்கேனே தங்கம். நீங்க எல்லாம் வயிறார சாப்பிடுறதை பாக்கைல எனக்கு ஒரு ஆத்ம திருப்தி. இது என்ன பெரிய வேலை ஆகிடப்போகுது. நீங்க ரசிச்சு சாப்பிடும் போது கிடைக்கிற சந்தோசம் வேற எதிலிருக்கும் சொல்லுங்க?" என்றவர்

ஆகாயச் சூரியனே Место, где живут истории. Откройте их для себя