🌤சூரியனே 39

173 22 25
                                    

மனோன்மணியின் எதிரிலிருந்த அப்பெண் "மேடம் என் பேரு சௌந்தர்யா. நான்.... நான்... ரவிதாஸோட வொய்ஃப்" என்க தன் கையிலிருந்த பேப்பர்களை ட்ராயர்க்குள் வைத்தவாறு இருந்தவள்,  சட்டென நிமிர்ந்து அப்பெண்ணை பார்த்தாள். இருபத்தைந்து இருபத்தேழு வயதிருக்கும். நல்ல நிறத்துடன் வடிவாக இருந்தாள். மனோன்மணிக்கு கணவனது இரண்டாம் திருமணம் தெரிந்த விசயம் என்பதால் அவள் பெரிதாக ஒன்றும் பாதிக்கப்படவில்லை. இவளுக்கு இங்கே என்ன என்ற சிறு அதிர்ச்சி தான்.

சௌந்தர்யாவை நிதானமாக அளவிட துவங்கினாள் அவள். ப்ளாஸோ பேன்ட்டும் சாட் குர்த்தியும் அணிந்திருந்தாள். அடர்ந்த சிகையை உயர்த்தி கொண்டையிட்டிருந்தாள். படிப்பின் கலை நன்றாகவே தெரிந்தது அவள் முகத்தில். இடுப்பில் கட்டப்பட்டிருந்த ஹிப் சீட் பேபி கேரியரில் அமர்ந்திருந்தான் குழந்தை.

குழந்தையை பார்த்தாள் மனோன்மணி 'ரதிமேகாவை போலவே இருக்கான் இந்த பையன்' அவளது மனம் நினைத்துக்கொண்டது.

கையிலிருந்த பேப்பர்களை சரியாக வைத்துவிட்டு நன்றாக  நிமிர்ந்து அமர்ந்தவள் அப்பெண்ணை நேராக பார்த்து "சரி. இப்போ என்னை எதுக்கு பார்க்க வந்திருக்க" என்றாள்.

"மேடம் அது... நான்..." என்றவளுக்கு அழுகை வர வார்த்தைகள் சிக்கிக்கொண்டன.

மனோன்மணி எரிச்சலுடன் "ப்ச்... இப்ப என்ன இங்க உக்காந்து அழுதுட்டு போக வந்தியா" என்று குரலை உயர்த்த மிரண்டுவிட்ட பெண்ணைக்கண்டு சற்று நிதானித்தவள் பெருமூச்சை வெளியிட்டவாறு

"சரி சொல்லு. என்னை எதுக்கு பாக்க வந்த" என்றதும் அவளும் தன்னை நிலைபடுத்திக்கொண்டு தொடர்ந்தாள்.

"மேடம் நான்... என்னை... தப்பா எடுத்துக்காதிங்க மேடம். முதல்ல என்னை மன்னிச்சிடுங்க என்னோட இந்த வாழ்க்கை உங்களோட இடம்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா என்னோட சூழ்நிலை மேடம். எனக்கு அம்மா இல்ல. அப்பாவும் ஆச்சியும் தான் வளர்த்தாங்க.  எனக்குப்பிறகு மூனு தங்கச்சிங்க. எங்கப்பா இவர் தான் மாப்பிள்ளைன்னு காட்டும்போது என்னால தலையை மட்டும் தான் ஆட்ட முடிஞ்சது. ஆனால் எல்லாத்தையுமே சொல்லி தான் கல்யாணம் பண்ணாங்க. இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்ற சூழலும் எங்க வீட்ல இல்ல" என்றவள் வடிந்த கண்ணீரை துடைத்தாள்.

ஆகாயச் சூரியனே Where stories live. Discover now