🌤சூரியனே 26

163 25 28
                                    

தாய்மையின் பூரிப்பு அவன்(ள்)
தாபத்தின் சாட்சியமாய்
தகிக்கும் கன்னத்தில்
தகதக வென செம்மை நிறம்
தவித்தாளோ பேதையவள்
தாங்கவியலா நாணத்தில்
தாலியிட்டவன் பார்வையிலே
தாழ்த்தி கொண்டாள் முகத்தினையே
தங்கமேனி பெண்ணவள் தான்
தரணியில் சேயேந்தும் நாள் எந்நாளோ!!!

தாய்மை வாழ்கென
தூய செந்தமிழ்
ஆரிராரோ ஆராரோ......
தங்க கை வளை
வைர கை வளை
ஆரிராரோ ஆராரோ......

பிற்பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. திருமணப்பட்டுடுத்தி அமர்ந்திருந்தாள் மனோன்மணி. அருகில் ரவிதாஸும் அவன் மடியில் லத்திகா ஸ்ரீயும். இருவருக்கும் நலங்கு வைக்கப்பட்டு இருந்தது. வளையளிட்டு நலங்கு வைத்துக்கொண்டிருந்த பெண்ணொருத்தி இருவருடன் சேர்த்து லத்திகாவுக்கும் விளையாட்டாய் மஞ்சளை பூசிவிட்டு சென்றாள்.

கழுத்திலிருந்த மாலையும் பட்டும் வயிற்றிலிருக்கும் குட்டி பாப்பாவும் கூட அவளுக்கு வியர்க்க வைத்துக்கொண்டிருந்தார்கள். விக்னேஷ் கைக்குட்டையை எடுத்து வந்து மனோன்மணியிடமும் ரவி தாஸிடமும் தந்தான். அவனை அன்பு பொங்க பார்த்தாள் மனோன்மணி. இப்போது மட்டுமல்ல காலையில் வந்ததிலிருந்து அவன்மீதான இவளின் அன்பு அவளுக்கு பெருகிக்கொண்டே தான் இருக்கிறது.

அவன் மட்டுமா வந்தான். அவனது குடும்பத்துடன் வந்தான். வந்தவன் மொய் எழுதவென்று ஒன்றும் வரவில்லை. சீர் சாமானுடன் வந்தான். வைத்திய நாதனும் மாதவனும் பிறந்தவீட்டிலிருந்து என்ன செய்ய வேண்டுமோ அதை விக்கியும் தான் எடுத்து வந்திருந்தான். அவனது அன்பு அவளுக்கு தெரிந்தது தான்.  ஆனாலும் அதை ஊரறிய செய்வான் என்று நினைக்கவில்லை அவள்.

சாப்பாட்டு பாத்திரங்களை அடுக்கிக்கொண்டிருந்தவனிடம் "விக்கி ஏன்டா..." என்று சற்றே சங்கடத்துடன் கேட்டவளை அர்த்தத்துடன் பார்த்தவன்

"மாதவன் அண்ணாக்கிட்ட போய் கேளு ஏன்டான்னு?  எனக்குனு இருக்கிறது நீ மட்டும் தான். ஒரே பையனா பிறந்துட்டு அப்படியே வாழவும் ஆசைப்படல நான்" என்றவன் அடுத்த வேலையை செய்ய சென்றுவிட்டான்.  கண்கலங்கி நின்றவள் மனோன்மணி தான். தன் உடன் பிறப்புகளை விட உயர்ந்தவன் விக்னேஷ் தான் என்பது அவளுக்கு புதிதாக ஒன்றும் புரிய வேண்டியதில்லை.

ஆகாயச் சூரியனே Where stories live. Discover now