🌤சூரியனே 5

256 40 34
                                    

இருப்பதைக்காட்டிலும் பறப்பதற்கே மனம் ஆசை கொள்கிறது. இயற்கை வளங்கள் முற்றிலும் அழிந்து போக முக்கியமான காரணி மனிதனின் இந்த பணத்தாசை. பெண்ணாசையும் மண்ணாசையும் அரசனையும் ஆண்டி ஆக்கிவிடும் என்ற பழமொழி வழக்கத்தில் உண்டு. பெண்ணின் மீது கொண்ட காதல் என்றும் மண்ணின் மீது கொண்ட பற்று என்றும் அவற்றை சுட்டியிருக்கலாம். பாலாய்போனவன் எந்த நேரத்தில் ஆசை என்று எச்சரிக்கை செய்தனோ?! எதை செய்ய வேண்டாம் என்று சொல்கிறோமோ அதை தானே மனித மூளை செய்யத்துணிகிறது. பெண்ணையும் கடத்துகிறான் தாய் மண்ணையும் அதன் வளங்களையும் கடத்துகிறான். எல்லாம் இந்த பணம் படுத்தும் பாடு!

இருண்டு கிடந்த அந்த அறையின் ஒளித்திரையில் கடல்வாழ் உயிரினங்களின் படங்கள் ஒவ்வொன்றாக மாற்றப்பட்டுக்கொண்டிருந்தது.

"  இது கோரல் ரீஃப்ஸ்!  அதாவது பவளப்பாறைகள். இது விலங்கு வகையை சார்ந்தவை. இந்த பவளப்பாறைகளால தானா சாப்பாட்டை உற்பத்தி செய்துக்க முடியாது. இதை சார்ந்து வாழ்ற உயிரினங்கள் சூரிய ஒளி மூலமாக சாப்பாட்டை உற்பத்தி செய்துக்கும். அதுக்கிட்ட இருந்த தனக்கான உணவுகளை வாங்கிக்கொள்ளும் இந்த பவளப்பாறைகள்.  அதனாலேயே ஆழமான பகுதிகள் இல்லாம சூரிய ஒளி நீருக்கடியில் ஊடுருவும் எல்லைகளில் தான் இவை இருக்கும். ஆழ்கடலில் இருக்கும் பவளப்பாறைகள் அதுக்கு பக்கத்தில் வரும் சின்ன சின்ன உயிர்களை முழுங்கி தனக்கான சாப்பாட்டை எடுத்துக்கும். கல்சியம் கார்பனேட் படிமங்களால் இது பாறைகள் போல காட்சியளிக்கும்.

நிறைய வகையான பவளப்பாறைகள் அழிஞ்சிட்டு இருக்கு . எங்க இருக்குன்னு பார்த்தோம்னா கல்ஃப் ஆஃப் மன்னார்  அதாவது மன்னார் வளைகுடா பகுதி. தூத்துக்குடி டூ இராமநாதபுரம் , அந்தமான் , லட்சத்தீவு , இலங்கை அப்பறம் அதை சுத்தியிருக்கும் சில தீவுகள் இந்த இடங்களில் இருக்கும் கடலில் பவளப்பாறைகள் அதிகமா இருக்கு .

பவளப்பாறைகள் உடைய பயன் அப்படின்னு பார்த்தா ரொம்ப அதிகம். கொடிகளை குவிக்கும் உயிர்ன்னு சொல்லலாம்.

ஆகாயச் சூரியனே Tempat cerita menjadi hidup. Temukan sekarang