கழுத்தை பிரகாஷ் நெரிக்க....கத்தினாள்...வினோ...
சட்டென விலகியவன்...ஐயோ.. சாரி.. சாரி....வினோ....என அவள் கையை பிடித்து அழுதான்....
அவள் வேறு புறம் திரும்பி கொண்டாள்...
வீட்டுக்கு கூட்டி வந்தவன்...ரொம்ப லேட் ஆகிடுச்சு...நான் போய் சாப்பாடு வாங்கி வரேன்.பத்திரமா இரு வினோ....என சொல்லி வெளியே போய் அவளை வீட்டில் வைத்து பூட்டினான்....
அவன் பூட்டுகிரான் என தெரிந்தும்.. அமைதியாக உள்ளே அமர்ந்து இருந்தாள்..
கண்கள் சுவற்றில் மாட்டி இருந்த ஃபோட்டோ ஃப்ரேமை நோக்கியது...ஒன்று அவளின் திருமண புகைப்படம்...அதன் அருகே அவள்,உதித்,வினித்..மூவரும் இருக்கும் படம். ..அவள் நடுவே இருக்க....அவளின் தோளை சுற்றி அவளின் இரு தம்பிகளும் கை போட்டபடி நின்று இருந்தனர்....கண்கள் கலங்கியது....
வினோ..வேணாம் வினோ....அவன் உனக்கு சரி பட்டு வரமாட்டான்...அவன் வேண்டாம்...நம்ம ஸ்டேட்டஸ்ககு தகுந்த ஆள் அவனில்லை...என உதி எவ்வளவோ சொல்லியும்...எனக்கு உன் பணம் வேண்டாம் என ஓடி வந்தாள்....
இன்று ....split personality disorder... சில நேரங்களில் அவளையே கொல்லும் அளவு மிருகமாக மாறுவான்...சில நேரங்களில் அன்பை பொழிபவனாக இருப்பான்....டாக்டரிடம் போவோம் என்றால் அதற்கும் சண்டை....இப்போதெல்லாம் அடிக்கடி மிருகமாக மட்டுமே இருக்கிறான்...அடி வாங்கி வாங்கி உடலும் மனமும் மரத்து விட்டது😐😐இப்போதெல்லாம் அவனிடம் தாழ்வு மனப்பான்மை,சந்தேகம் அனைத்தும் வந்து விட்டது...இது தான் காதலித்த பிரகாஷ் தானா என சந்தேகம் அவளுக்கு😐😐..யாராவது இந்த நரகத்தில் இருந்து காப்பாற்ற மாட்டாரா??என மனம் ஏங்கியது.....😐
யோசித்து கொண்டு இருக்க...ஃபோன் வந்தது...அவன் தான்..அவளின் கணவன்...
ஹலோ....
ஹலோ மேடம்....உங்க ஹஸ்பண்டுக்கு ஆக்சிடென்ட்....தலையில நல்ல அடி...இங்க XYZ ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்கோம்...உடனே வாங்க....அவர் ஃபோன்ல உங்க நம்பர்தான் முதலில் இருந்தது...
YOU ARE READING
எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு
Humorபுயலாய் மிரட்டும் அண்ணன்❣️....தென்றலாய் தீண்டும் தம்பி❣️❣️இவர்கள் இருவருக்கும் தனி தனியே மலரும் காதல்......