அவன் வேண்டும் என்றே ஆராதனாவை இழுத்து வைத்து பேசி கொண்டு இருக்க...பொறுமை இழந்த இஷியா தன் காரில் ஏறி கிளம்பினாள்....
அவள் சென்றதும் ஆராதனாவிடம் இருந்து கழண்டு வந்தான்..அவளோ மீண்டும் காதல் கனவுக்குள் சென்றாள்...
தன் காரை எடுத்து கொண்டு தன் வீடு செல்லும் பாதையில் திரும்ப...அங்கு அவனுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்க அவன் வீட்டு வாசலில் காரை நிறுத்து அதில் இருந்து இறங்கி வாகாக சாய்ந்து கொண்டு நின்று இருந்தால் இஷியா...
சுத்தம்...என மனதில் நினைத்துக் கொண்டு வந்து இறங்கினான்..
வாங்க மேடம்..என பல்லை காட்ட...
எதுக்கு avoid பண்ற??நேரடியாகவே கேட்டாள்....
அவன் திரு திருவென முழித்தான்..
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
திருமண முந்தைய நாள் வரவேற்பு நடந்து கொண்டு இருக்க...பாட்டி கண்கள் உதியை நோக்க..அவனோ இவர்கள் புறம் திரும்ப மறுத்தான்...
பாட்டி நான் வந்தது தான் அவனுக்கு கோபமோ??அதான் பேச மாட்டிங்குறானோ???
அதில்லை..அதற்காக அவன் பேசாமல் நிச்சயம் இருக்க மாட்டான்...எனக்கு தெரிஞ்சு அவன் உன்னை இங்கு பார்த்ததும் கண்டிப்பாய் இந்நேரம் உன் வாழ்வில் நடந்த அனைத்தயும் தெரிந்து கொண்டு இருப்பான்...
எப்படி பாட்டி???நம்ம கண்ணு முன்னாடி தான இருக்கான்...
அவன் உதித்...ஈஸ்வர் கம்பனி நிலை கூட இப்போ அவனுக்கு விரல் நுனியில் இருக்கும்....
இப்போ கூட நான் எதுக்கு அனுப்பினேன் என தெரிஞ்சு இருக்கும்..ஆனா பாரு சொல்ல மாட்டான்..எதுக்கு பாட்டி அனுப்பின???
அதோ மேடையில் நிற்கிற பொண்ணை கல்யாணம் பண்ண... குடும்பம் அப்படினா என்னனு தெரிஞ்சுக்க....
எதேய்......ஏய்..கிழவி..அங்க அந்த இஷியா வந்து மண்டைய பொலப்பா...
அவளுக்கு தான் அங்க ஆள் செட் பண்ணிட்டேனே...யாரு கூட யாரு சேரணும்னு ஒரு வரை முறை இருக்கு வினோ... கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக நாம தான் இடம் கொடுக்கணும்...அதான் இடம் ரெடி பண்ணினேன்...
ŞİMDİ OKUDUĞUN
எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு
Mizahபுயலாய் மிரட்டும் அண்ணன்❣️....தென்றலாய் தீண்டும் தம்பி❣️❣️இவர்கள் இருவருக்கும் தனி தனியே மலரும் காதல்......