ஏன் பிறந்தாய் மகனே
ஏன் பிறந்தாயோ .....பாடல் தெருவில் ஒலிக்க......குளித்து விட்டு வந்த வினித் படாரென்று கதவை சாத்தினான்...பின்னே இன்று அவன் பிறந்த நாள் அதுவுமாக இப்படி ஒரு பாட்டு கேட்டால்????
வீட்டில் இருந்து இருந்தால் பாட்டி இன்று அவர் கையால் சமைத்து கொடுத்து இருப்பார்...உதி அவனுக்கு பரிசு கொடுத்து இருப்பான்....
சற்று மனம் சுணங்கி போனது.....கதவை தட்டும் சத்தம் கேட்க....போய் கதவை திறந்தான்...வெளியே யாரும் இல்லை....ஆனால் கீழே ஒரு பை இருக்க...எடுத்து உள்ளே வந்தான்....
உதி...என இருக்க....புன்னகையுடன் அண்ணா....என அதை பிரித்தான்...ஒரு குட்டி டப்பா...அதை திறந்தவன் கண்கள் விரிந்தது....அது ஒரு பைக் கீ...
வினிக்கு bike என்றால் கொள்ளை பிரியம்..ஆனால் அவன் விவரம் தெரிந்து ஓட்ட ஆரம்பித்தது கார் மட்டுமே....ஆசையாக அவன் வண்டி வாங்கி இருக்கலாம் தான்.....ஆனால் அது உதிக்கு பிடிக்காது.....என்ன model new கார் வேணும்னாலும் கேளு..but பைக் no...
ஆனால் இன்று....என்னவாயிற்று அண்ணனுக்கு..??வெளியே ஓடினான்...
அழகிய கருப்பு நிற பல்சர்.....தொட்டு தடவி முத்தமிட்டான்.... உதிக்கு நன்றி சொல்ல மனம் ஏங்கியது...ஆனால் எப்படி பேசுவது???
யோசிக்கும் போது ஃபோன் அடித்தது....
ஹலோ...
ஆப்பி பொறந்த நாள் உனக்கு..
ஆப்பி பொறந்த நாள் உனக்கு...
ஆப்பி பொறந்த நாள் உனக்கு இன்னிக்கு.....
நான் வாழ்த்துறேன் இன்னிக்கு....என அந்த புறத்தில் கர்ண கொடூர வாய்ஸ் கேட்க....
வாய மூடு கிழவி.. நீ பாடுறேனு சொல்லி ஆப்பி பிறந்தநாளை ஆப்பு பிறந்தநாளா மாத்திடாத....என்றவன் குரல் கிண்டல் போல் இருந்தாலும் கண்கள் கலங்கி இருந்தது.....
போடா போடா புண்ணாக்கு...உனக்கு போய் வாழ்த்து சொல்ல வந்தேன் பாரு...
யாரு??நீ??அன்னிக்கு எதோ ஏலியனை பார்ப்பது போல பார்த்த???இப்போ என்ன??
YOU ARE READING
எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு
Humorபுயலாய் மிரட்டும் அண்ணன்❣️....தென்றலாய் தீண்டும் தம்பி❣️❣️இவர்கள் இருவருக்கும் தனி தனியே மலரும் காதல்......