ஆபீஸுக்கு சென்று விட்டாள் இஷியா...
அவள் மகிழ்ச்சி,கோபம் ,துக்கம் அனைத்தும் பார்த்த அவளது கேபின்...ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடம் ஆறுதல் அளிக்கும், வீடு,தாய் மடி,இயற்கை..இது போல அவளுக்கு ஆறுதல் அளிக்கும் இடம் அவளின் ஆபீஸ்....மனம் முழுக்க கோபம் கோபம் கோபம்.....இரவு எல்லாம் அவள் வீட்டிற்கும் செல்லவில்லை....காரிலேயே இருந்தாள்..காரிலேயே நன்றாக தூங்கினாள்...... கார் எங்கு சென்றது என யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை....
இப்போதும் நொடிக்கு ஒரு முறை மானம் கெட்ட மனது கதவை நோக்கி சென்றது கதவை யார் தட்டினாலும் திறந்தாலும் அவனாக இருக்குமோ என்ற நினைவு.....
இரவெல்லாம் ஒரு பொட்டு உறங்காமல் அவளை தேடி ஓய்ந்தான் வினித்....ஒரே இரவில் அவள் இல்லை என்றால் அவன் இல்லை என காட்டி விட்டாள்..இத்தனை நாட்களும் வெருப்பெற்றுகிறேன் என்ற பெயரில் கண் முன்னே தான் இருந்தாள்....பேசினாள் சிரித்தாள் ஆனால் இன்று...காலையில் போனவள் இரவெல்லாம் வரவில்லை எங்கு போனாள் என அலைந்து திரிந்தான்.........
அவள் அலுவலகம் வந்து விட்டால் என்றதும் ஓடினான்...
மே ஐ கம் இன் மேடம்....
சத்தம் கேட்டதும் சரேலென நிமிர்ந்தாள்....அவன் தான்...தேடி வந்து இருக்கிறான் எஸ்.. கம் இன்....
இரவெல்லாம் தூங்காத கண்கள், சிவந்து போய் ஒரே ராத்திரியில் ஓய்ந்து போய் இருந்தான்....அத்தனை டையர்டிலும் அவளை பார்த்ததும் பளீரிட்ட கண்கள்...மேடம் என ஓடி வந்தான்...
கை நீட்டி தடுத்தாள்....என்ன??
மறுபடியும் உங்க PA போஸ்ட் மேடம்..என நீட்டினான்...
இடியட் உன்னை யாரு சேர்த்தது....??
உங்க அப்பா தான் என்றான் அமார்த்தலாக.....
கோபம் வந்த போதும் அவனை நேராக நோக்கினாள்...
இப்போ எதுக்கு இப்படி பார்க்குறா???என யோசித்தான்...
அவனின் ஆர்டரை வாங்கியவள்...போய் வேலையை பாருங்க Mr.வினித்.. என்றாள் அத்தனை பல்லையும் காட்டி...
YOU ARE READING
எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு
Humorபுயலாய் மிரட்டும் அண்ணன்❣️....தென்றலாய் தீண்டும் தம்பி❣️❣️இவர்கள் இருவருக்கும் தனி தனியே மலரும் காதல்......