புயல் 15❣️

1.5K 57 2
                                    

கால் போன போக்கில் நடந்து கொண்டு இருந்தான் உதித்...

பேராண்டி..என்ற சத்தம் கேட்டு திரும்பினான்..ஒரு பாட்டி தூக்க முடியாமல் ஒரு மூட்டையை வைத்து கொண்டு நின்று இருந்தார்...
இங்க வாயா..

அவன் போனான்...

இந்தா இதை மட்டும் தூக்கி அடுத்த தெரு வரைக்கும் வரியா தூக்க முடியல ராசா...

என்ன நினைத்தானோ அதை தூக்கி கொண்டு நடக்க ஆரம்பித்தான்...

பாட்டி வீடு வந்ததும் இறக்கி வைத்தான்...அவன் தலையை தடவிய பாட்டி நல்லா இரு ராசா...என மனதார சொல்லினார்...அவனுக்கு மெல்லிய புன்னகை வந்தது...அவன் கையில் இருபது ரூபாயை வைத்தார்..வச்சுக்கோ..என்று சொல்லி வீட்டுக்குள் சென்றார்..

அந்த காசை பிரித்தான்...அத்தனை கசங்கல் அந்த தாளில்....அந்த கசங்களில் அவரின் உழைப்பு தெரிந்தது...500,2000 தாள்களை மட்டுமே பார்த்தவனுக்கு 20 ரூபாயை பார்ப்பது அரிது....ஏனோ உடல் சிலிர்த்தது.....

அதை சட்டையில் வைத்தான்....

ஒரு ரூபா நம்ம கைக்கு வந்தாலும் அதை தொடும் போது மனசு நிறையனும் ஈஸ்வரா.....அதுனால தான் லட்சம் குடுத்தாலும் நான் அந்த செஃப் வேலைக்கு வரலனு சொன்னேன்...
என்றோ அமி கூறிய வார்த்தைகள் அவன் காதுகளில் ஒலித்தது....

வீடு வாசல் வந்து உள்ளே செல்லாமல் நின்றான்..உள்ளே செல்ல பிடிக்கவில்லை...அவளுக்கு நலங்கு நடந்து கொண்டு இருக்கிறது...ஏனோ அதை காண விருப்பம் இல்லை...

உள்ளே அவளுக்கு மஞ்சள் பூசி கொண்டு இருக்க...அவள் கண்கள் வாசலை நோக்கி கொண்டே இருந்தது...

அடியே வாசலை பார்க்காத..முரளி அண்ணன் வர மாட்டாரு என கண்மணி கலாய்த்தாள்...

முரளியை எதிர்பார்க்கிறோமா??
அப்போது தான் மண்டைக்கு உரைத்தது...என்ன செய்து கொண்டு இருக்கிறாய் அமி??இன்னும் 2நாளில் உனக்கு திருமணம் .....அடுத்தவனை அடித்து இரத்தம் பெறுக வைத்தவனை யோசிக்கிரோமே??என தன்னையே நொந்தவல் நடப்பதை கவனிக்க ஆரம்பித்தாள்...

எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு Wo Geschichten leben. Entdecke jetzt