புயல் 21❣️

1.5K 58 4
                                    

வானத்தில் ஏற்கனவே பறந்து கொண்டு இருந்தவனுக்கு அந்த வார்த்தைகள் இன்னும் மேலே பறக்க வைத்து இருக்க வேண்டும்...ஆனால் அப்படி இல்லை போலவே......அவன் முகம் சந்தோஷத்தை பிரதிபலிக்காமல் மாறாக ஒரு சிறிய வலியை பிரதிபலித்தது....முகத்தை வைத்து அவர்கள் மனதை படிப்பதில் உதி மட்டுமா வல்லவன்???நம் இஷியாவும் தானே??

என்ன ஆச்சு???

இல்ல மேடம்..உங்களுக்கு ஏற்கனவே நிச்சயம் ஆகி விட்டது...என சொல்லி சற்று தள்ளி சென்றான் வினித்...

அட ச்சீ.. இவளோ தானா???அந்த கல்யாணமே ஒரு contract தான்.... நம்பர் ஒன் பொசிஷன் வேணும் அதுக்கு அந்த கல்யாணம் வேணும் அவ்ளோதான்...

என்னை கல்யாணம் செஞ்சா அது வராதே....

தெரியும்...யோசிச்சேன்...சில நேரங்களில் மூளை சொல்வதை விட மனம் சொல்வதை ஏனோ கேட்க தோன்றுகிறது....மனசுக்கு உன்னை தாண்டி செல்ல தெரியவில்லை....

எனக்கு இஷ்டம் இல்லை மேடம்...என்னை விட்டுடுங்க....என்றான் வறண்ட குரலில்....

ஏன் இஷ்டம் இல்ல??

என்ன சொல்வான்???உன்னை திருமணம் செய்து எப்படி என் அண்ணன் முன் போய் நிற்பேன் என்றா???அவன் என்னை என்ன நினைப்பான் என்றா??கண்களை மூடி திறந்து.....நமக்கு ஒத்து வராது மேடம்...

ஓ.. மத்த பொண்ணுங்க மாதிரி நான் பணக்காரி என்றதும் time paas பண்ண காதல் பண்றேன்னு நினைக்கிறீ்யா?? என்றவளின் குரலில் உஷ்ணம் இருந்தது...

அதை உணர்ந்தாலும் தன் பிடியில் அப்படியே நின்றான்...மனம் முழுக்க அவள் இருந்தாலும் அந்த காதலை கண்களில் காட்டாமல் இருக்க பிரம்ம பிரயத்தனங்கள் பட்டான்...

அதை அவன் ஆழ மூச்சு எடுப்பதிலேயே கண்டு கொண்டாள்...அவளுக்கு தெரியும் சில சமயங்களில் அவன் காதலை அவனின் கண்களில் கண்டு இருக்கிறாள்...உருகி வருபவன் திடீரென எதையோ நினைத்து சட்டென விலகி போவான்....இது வரை அதை அவள் பெரிதாய் நினைத்தது இல்லை...இன்று தான் முதன் முறையாக அவன் தன்னிடம் எதோ ஒரு பெரிய விஷயத்தை மறைப்பதாக தோன்றியது....

எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு Tempat cerita menjadi hidup. Temukan sekarang