புயல் 27❣️

1.6K 57 2
                                    

வெகு நேரம் காக்க வைத்த பின்பே மருத்துவர் வெளியே வந்தார்... தான் ஒரு மருத்துவன் என்றாலும் வினோவுக்கி எதோ ஒன்று என்றதும் அவன் மூளை சிந்திக்கும் திறனை மறந்தது....

டாக்டர்.....

குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லை தமிழ்..நீங்க கொடுத்த ஃபர்ஸ்ட் aid நல்லா வேலை செய்து இருக்கு....உங்க மனைவியோட தொண்டை பகுதி தான் நிறைய பாதிக்க பட்டு இருக்கு... புண் ஆகி விட்டது..குணமாக எப்படியும் 1மாதம் ஆகலாம்...கொஞ்சம் liquid சாப்பாடு தான் கொடுக்க வேண்டும்...கவனம்...போய் பாருங்க....

உள்ளே நுழைந்தான்..

அவனை பார்த்து அவள் கண்ணிருடன் இருக்க...
அவள் கைகளை பிடித்து கொண்டவன் ஒன்னும் இல்ல வினோ...நம்ம பாப்பாவுக்கு எதுவும் ஆகலை என அவள் வயிற்றை மெல்ல தடவினான்....

அவளுக்கு கண்ணீர் வழிந்தது....இத்தனை நடந்தும், உன்னை காயப்படுத்திய பிரகாஷின் அடையாளமும் அழிந்து விட்டது என்ற சொல்லை தான் அவன் சொல்ல போகிறான் என அவள் எதிர்பார்க்க...நம்ம பாப்பா என்றதிலேயே அவனின் மனம் உணர்த்தி விட்டான்....அவன் எத்தனை பயந்து உள்ளான் என்பதையும் அவனின் பிடியிலேயே புரிந்து கொண்டாள்.....இது அவளுக்கான உண்மையான காதல் துடிப்பு என புரிந்தாலும் மனதின் ஓரத்தில் இருந்த தயக்கம் மாற மறுத்தது....ஒரு தடவை பட்ட காயம் வடுவாக மாறி விட்டதல்லவா????

தமிழ் அம்மா அப்பா உள்ளே வந்தனர்....அவனின் அப்பா நன்றாக பேசி நலம் விசாரிக்க...வள்ளி அமைதியாக இருந்தார்...மகனின் சந்தோஷம் முக்கியம் என நினைத்தாலும் வினோ குணம் அவரை ஈர்த்தாலும் அவரால் முழுதாக வினோ வை மருமகளாக பார்க்க முடியவில்லை.....சிலரை உடனே மாற்ற முடியாது...

பாட்டியும் வந்து அவளை அணைத்து கொண்டார்....வினோ வாசலை பார்க்க.. உதியை தேட...அவன் எங்கு போனான் என தெரியவில்லை என்றார் பாட்டி...

வீட்டில் சேர்த்து கொண்டான்.. திருமணத்தை ஏற்று கொண்டான்...எல்லாம் பார்த்து பார்த்து செய்தாலும் அவளிடம் அவன் முகம் கொடுத்து பேசுவதில்லை...ஏன் பேசுவதே இல்லை...தம்பி பாசத்துக்கு ஏங்கி போனாள்....வினோ அம்மா என அவள் மடி விட்டு நகர மறுப்பான்...இப்படி அவன் இறுகி போக தானும் ஒரு காரணம் என குற்ற உணர்வு வேறு அவளை வருத்தியது.....வினோமா என அழைக்க மாட்டானா என அவனை ஆசையுடன் நோக்கும் போதெல்லாம் அவன் அவளை பார்க்கவும் மருப்பான்....

எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு Where stories live. Discover now