புயல் 11❣️

1.5K 64 2
                                    

பார்ட்டியில் அனைவரும் இருக்க...இஷியும் அமைதியாக அமர்ந்து இருந்தாள்..

மற்றவரோடு பேசினாலும் வினித் கண்கள் அவளை விட்டு விலக வில்லை...எதோ அவள் பார்ட்டி நடத்துவது போல அத்தனை அலங்காரத்துடன் அழகாக இருந்தாள்...அதீத அலை எப்போதும் ஆபத்து என்பதை அறிந்த வினித் இன்று இந்த அழகால் யாருக்கு என்ன ஆபத்தோ என யோசித்து கொண்டு இருந்தான்..அவளை பார்க்கும் போது அப்படியே உதித்தை நினைவு கொண்டு வந்தால்...அவனின் அமைதியும் என்றும் ஆபத்து தான்....

ஆர்வம் தாங்காமல் அவள் முன் போய் நின்றான்...

அவள் புருவம் உயர்த்தி பார்க்க...

என்ன பண்ண போறீங்க மேடம்???

நான் என்ன செய்ய போறேன்??

இல்ல மேடம்??நீங்க அமைதியா இருக்கிறது தான் எனக்கு சந்தேகமாக இருக்கு....கண்டிப்பா எதோ பண்ண போறீங்க??

அவனை மெச்சுதலாக பார்த்தாள்...
பாக்க தான போற??என மேடையை நோக்கினாள்...

அங்கு..விக்ராந்த் வந்து மைக் வாங்கினான்...

Good eveng ladies and gentlemen.... ரொம்ப வருஷம் கழிச்சு இந்தியா வந்தேன்...என்னோட கம்பெனியை பார்க்க..என இஷி பக்கம் பார்வையை செலுத்த...அவள் அமைதியாக இருந்தாள்...
கம்பெனில சில shares எல்லாம் விற்க போறேன்...ஷியா solutions ல சில unwanted ஆளுங்களை வெளியே அனுப்பணும் என வாசலை நோக்கினான்...அங்கிருந்து மிகவும் டிப் டாபாக இருவர் வந்தனர்....இதோ இவுங்க தான் இனி நம்ம company பார்ட்னர்.....என கை குலுக்க போக...அவர்கள் இருவரும் அவனிடம் கை கொடுக்க வில்லை ...

Sorry.. Mr.விக்ராந்த்..இந்த deal எங்களுக்கு வேணாம்..அதை சொல்ல தான் வந்தோம்..என மனப்பாடம் பண்ணி ஒப்பிப்பது போல் சொல்லி விட்டு மடமடவென வெளியேறினர்....

விக்ராந்த் அவர்கள் போன பாதையை குழப்பத்துடன் நோக்கினான்.... அலுவலகமே அவனை பார்த்து சிரிப்பது போல் இருந்தது...அவன் கண்கள் ஷியாவை நோக்க...அவள் அமர்ந்து ஜூஸ் அருந்தி கொண்டு இருந்தாள்...

எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin