புயல் 18❣️

1.4K 60 2
                                    

மண்டபம் மொத்தமும் ஸ்தம்பித்து நின்றது....வினோ சிலையாய் மாறி நின்றாள்...
அமி கண்களை விரித்து விட்டாள்.....என்னடா நடக்குது இங்க???

டேய்..என தமிழ் அம்மா கத்த....

தமிழ் அசையாது நின்றான்...

என்னடா காரியம் பண்ணின்வச்சு இருக்க??அங்க மண மேடையில ஒருத்தி உனக்காக உட்கார்ந்து இருக்கா..கூட பிறந்தவ அடுத்து உட்காரணும்... நீ என்னடான்னா??எவளோ ஒருத்திக்கு தாலி கட்டி இருக்க???அதுவும் ஏற்கனவே கல்யாணம் ஆகி வாழ்க்கையை தொலைச்சவளுக்கு...தமிழ் அம்மா கத்த..

உதி கைகள் இருக ஆரம்பிக்க...பாட்டி தடுத்தார்...

அதற்குள் தமிழ் கத்தினான்...அம்மா...இன்னொரு வார்த்தை அவுங்களை பற்றி பேசாத...

என்னடா பேசாத...?இப்போ மேடையில இருக்கிரவளுக்கும் கூட பிறந்தவளுக்கும் என்ன சொல்ல போற???

என்ன சொல்லணும்??ஏற்கனவே வேணாம்னு சொன்னவனை கழுத்துல கத்தி வச்ச மாதிரி தாலி கட்டுணு சொன்னா உடனே கட்டணுமா??என்னை பார்த்தா எப்படி இருக்கு....இப்பவே இப்படி இருக்கிறவன் என் தங்கச்சிக்கு புருஷனா??காசு இருக்கு மேலதிகாரி இதுக்காக பிள்ளையை குடுக்க தான பார்த்திங்க...நாளைக்கு இவன் இதே மாதிரி வேற எதாவது செஞ்சா???

அவன் தந்தை ஏற்கனவே அவன் சொன்னதை தான் யோசித்து கொண்டு இருந்ததால் வாயை திறக்கவில்லை ...

ஏய்..என் தங்கச்சி வாழ்க்கை டா..என முரளி அடிக்க வர...

ஒரே கையால் அவனை தடுத்தவன்..இது மாதிரி தான எனக்கும் இருந்து இருக்கும்...பாசம் இருக்கணும்..அது இன்னொரு பொண்ணை அவள் வாழ்வை பாதிக்கும் அளவு இருக்க கூடாது...

இனி உன் தங்கை திருமணம் எப்படி நடக்குது என பார்க்கலாம்....முரளி கத்த...

ஏன் நடக்காது??இதை கேட்டது அமி...

அனைவரும் அவளை நோக்க...

அமி என அவள் தை ஓடி வந்து அவளை கட்டி அழ ஆரம்பித்தார்...

இப்போ எதுக்கு மா அழர???இவன் என்னை கல்யாணம் பண்ணலேனா??என்ன சொன்னான் கேட்டியா??இனி யாரு என்னை கட்டுவாங்களாம்???அவன் தங்கச்சிகாக தான் மா இவுங்க நம்ம வீட்டுக்கு வந்து இருப்பாங்க..எனக்கு அப்படி தோணுது....
என சொல்லி முரளியை முறைக்க...

எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin