உருகாதோ எந்தன் உள்ளம் ...! எஸ்.ஜோவிதா - 3

1.1K 36 0
                                    

3
'என்னம்மா...? என்னடா? ஏன் அழுறே?' ஜானகி மகளின் சட்டையையும் முகத்தையும் பார்த்து பதறியவளாய் கேட்டாள்.

'அ....அ...அம்மா....வேணாம்மா....! நாம இங்கே இருக்க வேண்டாம்மா...வேறு எங்காவது போயிடுவோம்....வாம்மா...' தாயின் மார்பில் கோழிக்குஞ்சு போல் ஒட்டிக்கொண்டு கதறியது அந்தப் பிஞ்சு மனம். ஜானகி தன் மகளை தட்டிக்கொடுத்தபடி,

'ஏன்மா....என்னாச்சு?' என்றாள். சும்மா வாய் கேட்டாலும் என்ன நடந்திருக்கும் என்று அந்த ஏழைத்தாயால் ஊகிக்கமுடிந்தது. காட்டிக்கொடுக்காமல் மகளின் விழிநீரை துடைத்துவிட்டவளாய்,

'இதப்பாரம்மா....நாம வேறு எங்கு போனாலும் இந்த குடும்பத்து அய்யா, அம்மா போல பாசம் காட்டவோ எம்மை பாதுகாக்கவோ இடமும் இருக்காது! மனிதர்களும் இருக்கமாட்டார்கள். அவங்க ரெண்டு பேருக்காகவாது எல்லாத்தையும் பொறுத்துகிட்டு இருக்க பழகிக்கோடா...அய்யா, அம்மா என்ன சொல்றாங்களோ அவங்க சொல்படி நடம்மா....'

'அ....அம்மா...'

'என்னடா....?'

'எ.....என...எனக்கு அ...அ....ந்த ரே..ரோஹித்தை நினைச்சா பயம்மா இருக்கும்மா....'
நடுங்கியபடி கூறிய மகளைத் தடவிக் கொடுத்தபடி,

'ஏம்மா..? சின்னத்தம்பி ஒண்ணும் மோசம் இல்லைடா....அவங்க பாட்டியோட வளர்ப்பு அது. பாட்டி செல்லம் கொடுக்குறேன் பேர்வழின்னு சின்னய்யாவை கெடுத்துவைச்சிருக்காங்க. நீ பயப்படாதே..'
எனது தைரியப்படுத்தினாள்.

'ஏ..ஏம்மா நான் அவங்கப்பாவை அங்கிள்னு கூப்பிட்டா ரோ..ரோஹித் என்னை கட்டிக்கும் முறைன்னு சொல்றாங்க....அப்படின்னா என்னம்மா அர்த்தம்...' அந்த குழந்தை கேட்டதும் தாய் விக்கித்து போனாள்.

'இது...இது யார் சொன்னா?'

'ரோஹி...இல்லை சின்னய்யாதான்..நான் ஏதோ நாயாம்.என்னோட லிமிட் சமையல்கட்டு..என்னமோ பேசுறாரும்மா..' அவள் வாய் விக்கியபடி சொல்ல,

'ஆமாம்மா...அவரு சொல்றது சரிதான்..ஒண்ணு மட்டும் ஞாபகம் வச்சுக்கோம்மா நீ ஒரு ஏழைத் தாய் வயிற்றில் பிறந்த ஏழை மகள். நமக்கு மானமும், மரியாதையும் தான் மிகப்பெரிய சொத்து! அதை எப்பவும் இழந்துடக்கூடாது..! நம்மோட எல்லைக்குள்ளே நின்னுடணும்...! அதை தாண்டக்கூடாது..! தாண்டினா ஆபத்தும் சேதமும் நமக்குத்தான்மா..' தாய் சொல்லியபடி மகளை கட்டியணைத்து கணணீரோடு முத்தமிட்டாள்.
மாதங்கிக்கோ ஏதோ புரிய தாயின் கண்களைத் துடைத்துவிட்டாள்.

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Where stories live. Discover now