உருகாதோ எந்தன் உள்ளம் ...! எஸ்.ஜோவிதா - 4

1.1K 32 0
                                    

4
லக்ஷ்மி கணவனின் பெட்டியை எடுத்துகொண்டு அவரது அறைக்குள் நுழைந்தாள். இனி என்ன பேசியும் பலன் இல்லை. விசாலம் வைத்ததுதான் சட்டம். ரகுராமன் இயலாமையால் கோட்டை கழட்டி பெட்டில் சுழட்டி எறிந்தார். லக்ஷ்மி பொறுமையாக எடுத்து அதற்குரிய இடத்தில மாட்டிவிட்டாள். காபி எடுத்து வந்தாள் எதிரே மனைவி காபியுடன் நிற்பதை பார்த்தார்.

'லக்ஷ்மி..எனக்கு பயம்மாக இருக்கு..? கணவன் வாயிலிருந்து அந்த வார்த்தையை கேட்டதும் அவரை அதிர்வுடன் ஏறிட்டாள்.

'எதுக்குங்க..?'

'நம்ம மகனை எப்படியெல்லாம் வளர்க்கணும்னு எப்படிபட்டவனாக இருக்கணும்னு கனவு கண்டு பெற்றோம்..இ...இப்ப அவனது குணங்களையும் நடத்தையையும் பார்க்க எனக்கு அவனது எதிர்காலத்தை நினைத்து பயம்மா இருக்கும்மா...'

'என்னங்க நீங்க..? இதுக்குப்போய் பயந்துகிட்டு...அவன் சின்ப்புள்ளைங்க..வளர வளர நம்மை புரிஞ்சுப்பாங்க...எல்லா பாசத்தையும் விட தாய்ப்பாசம் ஒண்ணு இருக்கு! அதை மறந்துடாதீங்க....! எத்தனை வயசானாலும் கட்டுப்படுத்தமுடியாத பிள்ளை கூட தாய்பாசத்துக்கு கட்டுப்படும்...! இப்ப பாட்டி தனக்கு சப்போர்ட்டா இருப்பதால தான் இப்படி இருக்கான். போகப்போக புரியும்! அப்ப பாருங்க அம்மா நான் உங்க புள்ளை நீங்க சொல்றதைத்தான் செய்வேன்னு சொல்வான் பாருங்க..!' அவள் அவருக்கு ஆறுதல் சொல்வது போல தனக்கும் சொல்லிக்கொண்டாள் இது எல்லாம் நடக்குமா..? என்று அவளது தாய் மனம் கேட்டது.

என் பிள்ளை நான் விரும்பியவனாக வளரணும் என்று பிறந்ததிலிருந்து பார்த்து பார்த்து வளர்க்கும் பிள்ளைகளே பாதை தவறுகின்றபோது அதிகமான அந்தஸ்து பணத்தமிர் என்று பணக்காரர்களுக்கே உரிய குணநலங்கள் அத்தனையும் கொண்ட ஒரு பாட்டியின் வளர்ப்பு எப்படியாகும்? ரோஹித் பிறந்த அன்று அவனைத்தொட்டவள் லக்ஷ்மி மறுபடியும் பால் கொடுப்பதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டாள். மிகுதி பொறுப்பு விசாலாட்சியோடது. அதற்கு காரணமும் இருந்தது.

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Where stories live. Discover now