உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா -34

995 30 0
                                    


34

'ஏய் ரோஹி..! இது நம்ம ஹிட்லர்தானா?' வர்ஷா அதுவரை பேசாமல் நின்று விட்டு கிழே இறங்கி வந்து கேட்டாள்.

'எனக்கும் சந்தேகமாகத்தான் இருக்கு....எதுக்கும் என் கண்ணோடு சேர்த்து உன் கண்ணையும் அவங்க மேலே வை..' என்றான் தாடையை தடவியபடியே,


'ரோஹித்...உன் பாட்டியையே மன்னிப்பு கேட்க வைச்சுட்டியே...' ரகுராமன் மகனை பாராட்டினார். அவன் மாதங்கி மேல் வைத்திருக்கும் அபிப்பிராயத்தை அவன் வாயால் கேட்டதும் இன்னும் மகிழ்ந்து போனார்.

'குட்ட குட்ட குனிந்து கொண்டே போனால் குட்டு வாங்கிகிட்டே இருக்க வேண்டியதுதான்... ஒரு கட்டத்திலாவது..நிமிர்ந்து குட்டுறவங்களை எதிர்க்க வேண்டாம்? எல்லாம் வாய்ச்சாடல்தான்..'

அவன் பார்வை மாதங்கியின் மேல் பாய்ந்து மீண்டது.

'ரோஹித்! மாதங்கி அப்படி இல்லைப்பா...அவ ஏற்கனவே சாது..பயந்தவ..அவகிட்டே போய்..' ரகுராமன் அவளுக்குப் பரிந்து கொண்டு வந்தார்.


'சாதுவா? அது கூட மிரண்டா ஏதோ கொள்ளாதுன்னு படிச்சிருக்கேன்...இங்கே என்ன அதுக்கான அறிகுறியே இல்லை...வர்ஷா உன்கிட்டே இருக்கும் கலைகளை மாதங்கிக்கு கத்து கொடு....' அவன் தன்னை சாடியதை பொறுத்துக்கொண்டு இருந்தவள் அவன் வர்ஷாவிடம் சிபாரிசு செய்ய கோபம் வந்தது. முறைத்தாள்.

'உன் முறைப்பெல்லாம் என்கிட்டே தானா?' என அவளுக்கு மட்டுமே கேட்கும் வண்ணம் கிசுகிசுத்தான். அவள் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

'அடடா...என்னது? எல்லாத்துக்கும் பயந்து நடுங்குறே...அப்பா நீங்க வளர்த்த லட்சணத்தை பார்த்தீங்களா? உப்பு சப்பு இல்லாத விசயத்துக்கு எல்லாம் முறைக்குறா...ஆனால் உருப்படியான விசயத்தில் கோட்டை விடுறா...இது இவளோட வீக்னெஸ்..' என்றான் அவளை பார்த்து,

'ரோஹித் போதும்பா...மாதங்கியை சீண்டுறது தான் உன் வேலையா?.' தாய் அதட்டிவிட்டு போனாள்.

'ஏன் ரோஹி இவளோ தூரம் வீங்கிருக்கு...அறைஞ்சா இப்படி ஆகும் என்கிறாயா?' வர்ஷா மாதங்கியின் கன்னத்தை பார்த்தவாறே கேட்டாள்.

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Where stories live. Discover now