சொல்லிவிட்டு போன இரண்டு மணி நேரமும் தாண்டி மேற்கொண்டு ஒருமணி நேரமும் ஆகியிருந்தது மீட்டிங் முடிய. அங்கேயே லஞ்சை முடித்துக்கொண்டு நிதுல்தரேனும், நவீனும் வந்தார்கள். வந்தவர்கள் வெளியே விட்டுவிட்டு போயிருந்த அறுந்தவாலை தேட அது சற்று தள்ளி இருந்த ஒரு மரத்தடியில் போனை பார்த்த மேனிக்கு தூங்கிக்கொண்டு இருந்தது. கையில் வைத்திருந்த போனில் ஏதோ படம் ஓடிக்கொண்டு இருந்தது. அவளை சுற்றும், முற்றும் தேடிவிட்டு தொலைவில் தூங்கிக்கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு
"இவளால் என் மானமே போகுது. அவளை எழுப்பி ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிட்டுவா நவீன். யாராச்சும் எந்த கம்பெனியில் வேலை செய்யுறன்னு அவளை கேட்டால் தப்பி தவறிக்கூட நம்ம கம்பெனி பெயரை சொல்லிவிட கூடாதுன்னு. அவளுக்கு ஒரு கேப் புக் பண்ணி கொடுத்து, அதில் அவளை தூக்கி கடாசிட்டு வந்து சேரு. நீ வந்த பிறகுதான் நான் கிளம்பனும்." என்று நிதுல்தரேன் கூற
"பாவம் சின்ன பொண்ணு. அவளுக்கு இந்த வியாதி இருக்குன்னு உங்களுக்கு தெரியாதா? அவளால பத்து நிமிஷத்துக்கு மேலே ஒரே இடத்தில் இருக்கவே முடியாது. அவளை போய் மூணு மணி நேரமா ஒரே இடத்தில் விட்டுட்டு வந்தா அவ என்ன செய்வா?" என்று நவீன் அவளுக்காக ஏண்டு பேச
"அப்போ அவளை உன் தலையில் தூக்கி வச்சுட்டு சுத்து. இப்போ போய் அவளை எந்த இடத்தில் இருந்து காலி பண்ணுற வேலையை பாரு." என்றான் நிதுல்தரேன்.
'இவருக்கு ஏன் இவளை கண்டாலே பத்திட்டு வருது. அவ என்ன செய்தாலும் குற்றம் கண்டுப்பிடிச்சா எப்படி?' என்று முணங்கிக்கொண்டே சென்றான் நவீன் மதுஷாலினியை நோக்கி.
எப்போது கீழே விழலாம் என்ற எண்ணத்தில் இருந்தது அவள் கையில் இருந்த போன். இங்கு நிதுல்தரேன் மீது இருந்த எரிச்சலில் அவள் அருகில் சென்ற நவீன்
"ஷாலு...ஏய் ஷாலு" என்று அவள் தோளை தொட்டு உலுப்ப, கையும், காலையும் பரத்திக்கொண்டு "ஹாங்" என்று பதறி கண்விழித்தவள் கையில் இருந்து போன் விழுந்தது. அதை உணராதவள் தன்னை யாரோ தொட்டுவிட்டார்கள் என்ற உணர்வில் ஒரு கராத்தே வெட்டு கொடுக்க
YOU ARE READING
கொஞ்சும் கவிதை நீயடி
Romanceஒரு அழகிய டாம் அன்ட் ஜெரி ஜோடியின் காதல் கதை. சிங்க பெண்ணாக வலம் வரும் நாயகியின் கதாபாத்திரம், கதாநாயகனை விட சற்று கனத்தது. பெண்கள் வாழ்வில் சந்திக்கும் துன்பத்தை எந்த கண்ணோட்டத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்று கூறும் ஒரு கதை. போராட்டாம்தான் வாழ்க்கை...