அத்தியாயம் 20

1.8K 132 17
                                    

"என்னாச்சு மேடம்? உங்க பீல்டை விட்டே வெளியே போயிட்டிங்க போல.  இன்னுமா நீங்க உங்க லவ் பிரேக்கப்பில் இருந்து வெளியே வரல?" என்று ஆதவன் கேட்டுக்கொண்டே இவள் வீட்டுக்குள் வர 

"வாங்க ஆதவன் சார்! உங்கட்ட நான் சொல்லனுமுன்னு நினைச்சிட்டு இருந்தேன்.  ஆனா மறந்துட்டேன்.  லவ் பிரேக்கப் எல்லாம் முடிஞ்சிடிச்சு. லவ் சக்ஸஸ் ஆயிடிச்சு.  இன்னும் ஐந்து நாளுல எனக்கும் என் பேபிக்கும் கல்யாணம்." என்று இவள் உற்சாகமா கூற 

"ஓஓ அப்படியா வாழ்த்துக்கள்.  அப்போ இன்னும் கொஞ்ச நாள் உங்களை பத்திக்கையில் பார்க்க முடியாது." என்று இவன் கூற 

"எதுக்காக? கல்யாணத்துக்கும், என் வேலைக்கும் என்ன சம்மந்தம்.  ஆபிஸ் போய்தான் செய்யனுமிங்கிற வேலை இல்லையே! நான் எங்கே இருந்தாலும் செய்வேன்.  இப்போ கூட என் வேலை நடந்துட்டுத்தான் இருக்கு. அன்னைக்கு அந்த வசந்தன் உடம்பில் இருந்த டாட்டுவை போட்டோ எடுத்து வந்து கொடுத்தேனே அது என்ன ஆச்சு?" என்று இவள் கேட்க 

"அது பழசா ஆச்சு. அது வேற , பிரசாந்த் உடம்பில் இருந்த டாட்டூ வேற.  அதுக்கு பிறகும் ஒரு கடத்தல் நடந்திருக்கு.  அது  எப்போ கொலையா மாறுமோ! அதுக்குள்ள கொலைக்காரனை பிடிக்கணும்." என்று ஆதவன் கூற 

"நீங்க சரியா பார்க்கல போல ஆதவன் சார்.  பிரசாந்த் உடம்பில் இருந்த டாட்டூவும், வசந்தன் உடம்பில் இருந்த டாட்டூவும் வேற வேற மாதிரி இருக்கலாம்.  ஆனால் இரண்டுமே ஒரே ரகம்தான்." என்றவள் தனது லேப்படாப்பை எடுத்து வந்தாள்.  கூடவே ஆதவனுக்கு காஃப்பியும் கொண்டுவந்தாள்.  

அதை வாங்கிக்கொண்டவன் அவள் லேப்டாப் ஸ்க்ரீனை பார்த்தான்.  

"இந்த ட்ராகன் எல்லாமே ஒரே ரகம்தான்.  ஆனா அதுக போஸ்தான் வேற வேற. இதெல்லாம் ஒரு மாதிரியான அர்த்தத்தை குறிக்கும் இமேஜஸ். இந்த டாட்டூவை உடம்பில் குத்திக்கும்  மனுசங்க எல்லோருமே வெறும் காமத்துக்கு மட்டுமே அடிமையானவங்க.  இது பிரசாந்த் உடம்பிலும் இருந்திச்சு, வசந்தன் உடம்பிலும் இருந்திச்சு.  அப்படின்னா இன்னும் இரண்டு பேர் உடம்பிலும் இருக்கும். இப்போ நம்ம கேள்வி அந்த இரண்டு பேரும் உயிரோடு இருக்கிறானுங்களா இல்லையான்னுதான்.  ஒன்னு மட்டும் நிச்சயம், செத்தவனுங்க எல்லோரும் புடவையை பார்த்தா கூட தப்பு செய்யுற ரகம். அப்படின்னா கொன்னவன் நிச்சயமா அவனுங்களால பாதிக்கப்பட்ட பெண்ணின் காவலனா கூட இருக்கலாம்.  ஐ மீன், அப்பா, அண்ணன், தம்பி, காதலன், கணவன் அப்படின்னு. ஆனா எனக்கு இதுதான் பெரிய ஆச்சரியம், இவனுங்களைப்பற்றி எந்த தப்பான செய்தியும் வெளியே வரலையேன்னுதான்." என்று மதுஷாலினி கூற 

கொஞ்சும் கவிதை நீயடிWhere stories live. Discover now